ஆஞ்சநேயர் ஆடிய அற்புத நடனம் வீடியோ

Hanuman
- Advertisement -

வாயு புத்திரனான ஆஞ்சநேயர் பல சாகசங்களை புரிந்துள்ளார். ராம தூதனான இவர் இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் பெரிதும் உதவியவர். ஒரு மலையையே பெயர்த்தெடுத்து தூக்கும் அளவிற்கு வலிமைகொண்ட இவரின் வலிமைக்கு நிகர் இவர் மட்டுமே. இப்படி பல சிறப்புக்கள் கொண்ட அனுமனை போற்றும் வகையில் அவரின் பாடலுக்கு அனுமன் வேடம் இட்டு குழந்தைகள் ஆடும் அற்புத நடன காட்சி இதோ.

- Advertisement -

மாருதி, அனுமன் என்று பல பெயர்களை கொண்ட இவர் இந்துக்கள் வணங்கும் முக்கிய தெய்வங்களுள் ஒருவராக விளங்குகிறார். ராமாயணம், மகாபாரதம் என இரு புராணங்களிலும் இவரை பற்றிய பல குறிப்புக்கள் உண்டு. ராமாயணத்தில் ராமனோடு எப்பொழுதும் இருந்த இவர் மகாபாரதத்தில் அர்ஜுனனின் தேரில் இருந்து அர்ஜுனனை காத்தருளினார். அதோடு பீமனுக்கு சக்தியை வழங்கினார். இவரை திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுவதுண்டு.

அனுமன் என்ற பெயர் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியில் ஹனு என்றால் தாடை என்று பொருள், மன் என்றால் பெரியது என்று பொருள். ஆக அனுமன் என்றால் பெரிய தாடை உடையவர் என்று பொருள்படும்படி இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. இவரின் இதயத்தில் என்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே குடிகொண்டுள்ளார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தனது இதயத்தையே கிழித்து காட்டிய மகான் இவர்.

- Advertisement -