அனுமன் ஜெயந்திக்கு படிக்க வேண்டிய பாடல் வரிகள்

hanuman
- Advertisement -

ஹனுமன் என்று சொன்னாலே நம் கண் முன் வந்து நிற்பது அவரது ஆஜானபாகுமான தோற்றமும் கம்பீரமும் தான். ராமருக்கு எல்லா வகையிலும் உதவி செய்தவர். இவர்கிட்ட இருந்து பாதி பலம் நமக்கு கிடைக்க வேண்டாம். அவர் பலத்தில் இருந்து ஒரு சிறு துளி அளவு நமக்கு கிடைத்தால் கூட போதும். வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர்த்துப் போராடி தைரியமாக வாழ்க்கையை ஓட்டி விடலாம்.

பல சிறப்பு அம்சங்களை கொண்ட சிவ அம்சமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் பிறந்தார். நாளை 11.1.2024 தேதி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. நாளைய தினம் ஹனுமன் ஜெயந்தி. இவருடைய பிறந்தநாள் நாளைக்கு. இவரை போற்றி புகழும் வகையில் ஒரு பாடல் வரிகளை பாடி அனுமனை வழிபாடு செய்தீர்கள் என்றால் அவர் பலத்தில் இருந்து பாதி பலத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

அப்படியே பிறந்தநாள் அன்று ஐஸ் வச்சு, அவரைப் பற்றி புகழ்ந்து பாட போகின்றோம். அதனால் மனம் குளிர்ந்த ஆஞ்சநேயர் நாம் கேட்டவரங்களை நமக்கு கொடுக்கப் போகின்றார் அவ்வளவுதான். அது என்ன பாடல் வரிகள். தெரிந்து கொள்ள ஆர்வம் உங்களுக்கு இருக்குதா. வாங்க பார்ப்போம்.

அனுமன் ஜெயந்தி பாட வேண்டிய பாடல்

ராமாயணத்தில் இந்த ஆஞ்சநேயருக்கு பெரிய பங்கு இருக்கிறது. ராமருக்கு துணையாக நின்று சீதா தேவியை மீட்டுக் கொண்டு வருவதில் ஆஞ்சநேயர், ராமருக்கு செய்த உதவியை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது. இந்த ஆஞ்சநேயரை பாராட்டும் வகையில் கம்பர் இந்த பாடல் வரிகளை அழகான பாடல் வரிகளை நமக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி

- Advertisement -

அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்

விளக்கம்:

அஞ்சிலே ஒன்று பெற்றான் – பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு பகவானுக்கு மகனாக பிறந்தவன் ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி – பஞ்சபூதங்களில் ஒன்றான நீர், கடலைத் தாண்டி சென்றவர் ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் மார்க்கத்தில் பறந்து, ராமருக்காக சென்றவர் ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் – பஞ்சபூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்றெடுத்த சீதா தேவியை அசல் ஊரான இலங்கையில் பார்த்து

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – பஞ்சபூதங்களான பூமியில், தீயை வைத்தார் ஆஞ்சநேயர்.

அவன் எம்மை அளித்துக் காப்பான் – இத்தனை சிறப்பம்சங்களையும் கொண்ட ஹனுமான் என்னையும் அரவணைத்து பாதுகாத்து காப்பார்

பஞ்சபூதத்தை தான், அஞ்சிலே அஞ்சிலே என்ற வார்த்தையை கம்பர் அழகாக வர்ணித்துள்ளார். பஞ்சபூதங்களிலும் இந்த ஹனுமன் எப்படிப்பட்ட விளையாட்டு விளையாடி இருக்கிறார் என்பதை எத்தனை அழகான பாடல் வரிகளில் சொல்லியுள்ளார். இந்த அழகான பாடலை படித்தால் அந்த அனுமன் மனம் இறங்கி வர மாட்டாரா.

இதையும் படிக்கலாமே: 2024 புது கேலண்டர் பரிகாரம்

அதுவும் இன்று அவருக்கு பிறந்தநாள். இந்த பாடல் வரிகளை அர்த்தம் தெரிந்து பாடி ஹனுமனை வழிபாடு செய்து பாருங்கள். இதைவிட மன நிறைவு வேறு எதில் கிடைக்கும். அற்புதம் வாய்ந்த இந்த நாளில், இந்த பாடலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -