2024 புது கேலண்டர் பரிகாரம்

calender
- Advertisement -

ஆங்கில புது வருடம் பிறந்து விட்டது. புதுப்புது கேலண்டரும் வீட்டில் நிறைய வந்துவிட்டது. அதை வீட்டில் மாட்டியும் விட்டோம். ஆனால் வாழ்க்கையில் முன்னேற புது வாய்ப்புகள் வரவில்லையே என்ன செய்வது, என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்காக இன்று புத்தம் புதிய ஒரு தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த புத்தாண்டை சிறப்பு மிக்க புத்தாண்டாக மாற்ற தினம் தினம் அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீச இந்த வருடத்தையே நமக்கு வசியம் ஆக்கிக் கொள்ள கேலடன்டரில் எழுத வேண்டிய அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட மந்திரத்தை பற்றிய அறிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்க பண கஷ்டம் இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

- Advertisement -

2024 கேலண்டில் எழுத வேண்டிய எண்

இந்த வருடமானது சனி பகவானுக்கும், சுக்கிர பகவானுக்கும் உரிய வருடமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சனி பகவானுக்கு உரிய எண் 8. சுக்கிர பகவானுக்கு உரிய எண் 6. 2024 ன் கூட்டுத் தொகை எட்டு. 24 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 6. இந்த 24 என்பது, எண்களில் மிக மிக அதிர்ஷ்டம் வாய்ந்த எண்ணாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்த வருடம் எல்லோருக்கும் அதிர்ஷ்டமான வருடமாக தான் அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

இந்த பரிகாரத்தை செய்ய சிவப்பு நிற பேனா அல்லது ஸ்கெட்ச் தேவை. அடுத்து நீல நிறத்தில் பேனா அல்லது ஸ்கெட்ச் தேவை. உங்களுடைய கேலண்டரில் எந்த இடத்தில் கொஞ்சம் இடம் இருக்கிறதோ, அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கேலண்டருக்கு முன்பக்கமாக இருக்கட்டும். முதலில் சிவப்பு நிற பேனாவில் 666 என்ற எண்ணை எழுதி விடுங்கள். அந்த நம்பருக்கு கீழே சுக்கிரனுக்கு உரிய இந்த மந்திரம் 6 முறை எழுத வேண்டும். ‘ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ’ இதுதான் சுக்கிர பகவானின் மூல மந்திரம்.

- Advertisement -

அடுத்தபடியாக அதற்கு பக்கத்தில் நீல நிற பேனாவைக் கொண்டு 888 என்ற எண்ணை எழுதிவிட்டு அதற்கு கீழே சனிபகவானின் மூல மந்திரத்தை எழுத வேண்டும். சனி பகவானின் மூல மந்திரம் இதுதான். ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஸக ஷநிஷ்வராய நமஹ’.

தினமும் காலண்டர் பேப்பரை கிழிக்க கூடிய நாள்காட்டியிலும் இந்த எண்ணையும் மந்திரத்தையும் எழுதலாம், அல்லது மாத காலண்டர் இருக்கும் அல்லவா ஒவ்வொரு மாதமாக மாற்றி வைப்போம் அந்த நாள் காட்டியிலும் இந்த எண்ணையும் மந்திரத்தையும் எழுதி வைக்கலாம். மேல் சொன்ன விஷயங்களை கேலண்டரில் எழுதி வைக்கும்போது தினம் தினம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

- Advertisement -

தினமும் நாள்காட்டியை எப்படியாக இருந்தாலும் நம் ஒருமுறையாவது பார்ப்போமல்லவா. தினசரி கேலண்டரை கிழிக்கும் போது இந்த மந்திரம் நம் கண்ணில் படும்‌. அப்போது சுக்கிர பகவானின் நினைப்பும் சனிபகவானின் நினைப்பும் நமக்கு வரும். அந்த மந்திரத்தை நம்மை அறியாமலேயே ஒரு முறை படிப்போம்.

இதையும் படிக்கலாமே: புது வீடு கட்ட செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு பரிகாரம்

இதனால் உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் நடப்பதை உணர்வீர்கள். இந்த வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்க இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரமும் இந்த இரண்டு வரி மந்திரமுமே போதும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -