இன்று அனுமன் ஜெயந்தி – இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு

Anjaneya mantra in Tamil

நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ வீர புருஷர்களையும், மங்கையர்களையும் பற்றிய சிறப்பான சரித்திரங்கள் பல உண்டு. இவற்றில் ஒரு சிலர் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதில் தங்களின் சிறந்த குணங்களால் நிலைத்து நிற்கின்றனர். அப்படிபட்ட ஒரு காவிய நாயகன் “ஸ்ரீ ஆஞ்சநேயர் ” ஆவார். மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம் “அனுமன் ஜெயந்தி” தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Hanuman

“அனுமன்” என அழைக்கப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர் மார்கழி மாதத்தில் வரும் “மூலம்” நட்சத்திரத்தில் வானர குல வேந்தரான “கேசரி” மற்றும் “அஞ்சனா” தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அனுமன் ஒரு தெய்வ பிறவி ஆவார். அவர் சிவபெருமானின் வடிவானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்று தேர்ந்தவர். எனவே அவருக்கு “சுந்தரன்” என்கிற பெயரும் உண்டு. பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் அனுமனின் பக்திக்கு தான் அடிமை என ஒத்துக்கொண்டார்.

இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இன்றும் இமய மலையில் அருவமாக ராமதியானத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. மகத்தான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மூல நட்சத்திர தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உணவு நீர் ஏதும் அருந்தாமல் அருகிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பின்பு வீடு திரும்பி ஸ்ரீ ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் மந்திரங்கள் துதித்த வாரே, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவதற்கு வடைகள் தயாரிக்கலாம் அல்லது வெற்றிலை மாலை சாற்ற வெற்றிலைகளையும் கோர்க்கலாம்.

Hanuman

மாலையில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நீங்கள் தயாரித்த வடை, வெற்றிலை மலைகளை சாற்றி வழிபட வேண்டும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷம் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபங்கள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் அருளால் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
மகம் நட்சத்திர பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hanuman jayanthi in Tamil. It is also called Anjaneyar valipadu in Tamil or Margali moola natchathiram in Tamil or Hanuman jayanti pooja in Tamil or Hanuman valipadu in Tamil.