இன்று(12/1/2021) ஹனுமன் ஜெயந்தி! மாலையில் ஹனுமருக்கு இதை செய்தால் நினைத்ததெல்லாம் அப்படியே கிடைக்கும் தெரியுமா?

hanuman-thulasi
- Advertisement -

மார்கழி மாதம் 28ஆம் நாள் ஆகிய இன்று அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று நாம் அவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவரின் அருள் பெற இன்றைய நாளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று காலை முதலே விரதம் இருப்பவர்கள் மாலையில் அனுமன் கோவிலுக்கு சென்று இதனை செய்யலாம். அப்படி விரதம் இல்லாமல் இருந்தாலும், இன்றைய நாளில் இந்த மந்திரத்தை உச்சரித்து அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். அதைப் பற்றிய தகவல்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

hanuman

14 வருடம் வனவாசம் அனுபவித்த பிறகு பட்டாபிஷேகத்தை ராமபிரான் ஏற்கும் பொழுது, சீதை அனுமனுக்கு முத்துமாலை ஒன்றை பரிசாக அளித்தார். அந்த முத்து மாலையை ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்து அதில் ராமபிரான் உடைய உருவம் இல்லை என்று கூறி அந்த முத்துமாலையை நிராகரித்தார் அனுமன். இதனால் அந்த அவையில் குழுமியிருந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமன் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறார்? என்பது ஸ்ரீ ராமருக்கு நன்றாகவே தெரியும். இதனால் ராமபிரான், ‘நீ என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதால், உன்னுள் நான் இருக்கிறேன் என்பதை எப்படி நிரூபித்து காட்டுவாய்? என்று கேள்வி கேட்டார்.

- Advertisement -

இதனை நிரூபிக்கும் விதமாக அனுமன் தன் நெஞ்சை பிளந்து அதில் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவியும் இருப்பதை உலகுக்கு காட்டி தன் பக்தியை நிலை நாட்டினார். இதனால் தான் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை கூடிய இந்த சுபதினத்தில் ஹனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மாநிலத்தில் வைகாசி மாதம் வரும் வளர்பிறை தசமி திதி அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

hanuman-heart

இன்றைய நாளில் அனுமன் மற்றும் வைணவ திருத்தலங்களில் அனுமனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும் இந்த அபிஷேகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது ஐதீகம். ஹனும பக்திக்கு மிஞ்சிய பக்தி இவ்வுலகில் இல்லை என்பதை பக்தர்கள் நன்றாகவே அறிவர். உங்கள் வாகனங்களில் ஹனுமர் புகைப்படத்தை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அத்தகைய பக்தி மிக்க ஹனுமனை இன்று வணங்கும் பொழுது எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் உடனே நிவர்த்தியாகிவிடும். அவருக்கு இன்றைய நாளில் அபிஷேகப் பொருட்களை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுங்கள். வெண்ணை காப்பு சாற்றுவது இன்றைய நாள் விசேஷமான பலன்களைக் கொடுக்கும். சனி தோஷம் நீங்க இன்று ஹனுமரை வேண்டுங்கள்.

sani-baghavan

வீட்டில் ஹனுமனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை ஆகியவற்றை சாற்றி வெண்ணை நிவேதனம் வைத்து, அவல், பொரி போன்றவற்றை படைத்து அவரை வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அனுமனுக்கு வால் வழிபாடு செய்து வர கடன் தொல்லைகள் தீரும். கோவிலில் வடை மாலை சாற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

- Advertisement -

vadai-malai-hanuman

இன்று கோவிலில் கொடுக்கப்படும் துளசி இலைகளை மற்றும் சந்தனத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும். வருமான தடை நீங்கி செல்வம் பெருகும். வீட்டில் சண்டை, சச்சரவுகள், துயரங்கள் போன்ற கஷ்டங்கள் எல்லாம் நீங்கி ஒற்றுமை பலப்படும். சகோதர சகோதரிகள் உடனான பிரச்சனைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

ramar1

ராமரும் லட்சுமணன் இணைந்தது போல உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களும் ஒற்றுமையாக வாழ இன்றைய நாளை அனுமனை வழிபட்டு பயன் பெறலாம். மேலும் அனுமன் மந்திரங்கள் உச்சரித்து மனத்தூய்மை பெறலாம். அதை விட ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதுவது, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வருவதாலும், செந்தூரத்தை வெற்றி திலகமாக இட்டுக் கொள்வதாலும் ஜெயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
போகி அன்று உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிப்பது போல, கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகளை எரிக்க இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -