அனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும் உடனே தீரும்!

hanuman

பண கஷ்டம் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒன்று தான். சில மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அவ்வகையில் அனுமனுக்கு உரிய இந்த மந்திரமும் மிகவும் வலிமையான ஒன்று தான். இந்த மந்திரத்தை சரியாக உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் அத்தனை பண கஷ்டங்களும் உடனடியாக நீங்கி விடும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாம் செய்ய இருக்கும் பரிகாரம் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

money

பணம் தேவைப் படாதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கும் பணம் தேவை தான். ஆனால் தேவையான நேரத்தில் கிடைக்காத பணம் பின்னர் கிடைத்தும் வீண் தானே? ஆக தேவையான நேரத்தில் கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய்க்கு கூட அதிகம் மதிப்பு உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை. நாளை கிடைக்க இருக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்க இருக்கும் கலாக்காய் சிறந்தது என்பார்கள். உங்களுடைய தேவையின் பொழுது பணம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அனுமனுக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்ல பலன் தரக்கூடிய இந்த பரிகாரத்தை பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

ராமனின் பக்தனாக இருக்கும் அனுமன் பிரம்மச்சாரியாக இருந்தாலும், பக்தர்களுக்கு காக்கும் கடவுளாகவும் விளங்குகின்றார். அவருடைய பக்தர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் அவர் எப்போதும் சோதனைகளை கொடுப்பதில்லை. மனதார ஒரு வரம் வேண்டினால் அதனை மனமுவந்து உடனே கொடுக்கக் கூடிய ஒரு கடவுள் என்றால் அது அனுமன் என்று தான் கூற வேண்டும்.

hanuman

ஹனுமனுக்கு எழுதப்படும் 108 ராமஜெயம் நம்முடைய பாவ கணக்கிலிருந்து பாவங்கள் புண்ணியக் கணக்காக மாற்றுவதற்கு துணை புரிகின்றது. அவ்வளவு சக்தி வாய்ந்த ராமஜெயத்தை நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதி மாலையாக கட்டி அனுமனுக்கு போடுவது விஷேசமானது. அதே போல உடனடி பணத்தேவைக்கு, பணக்கஷ்டம் நீங்க நல்ல பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமையில் வளர்பிறை இருக்கின்ற திதியில் செய்வது உத்தமம். செவ்வாய் அன்று செய்யும் இந்த பரிகாரம் மிகவும் விசேஷமாக மாறுகின்றது இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மாமிசம் உண்பதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய நாளில் மாமிசம் ஏதும் உண்ணாமல் சுத்தமான நோன்புடன் அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் நல்லது நடக்கும்.

Moondram pirai

வளர்பிறை இருக்கும் செவ்வாய் அன்று காலை எழுந்து சுத்தமான உடை உடுத்திக் கொண்டு அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கிருக்கும் அனுமன் சன்னிதியில் அமர்ந்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 48 முறை உச்சரிக்க வேண்டும். 48 முறை அல்லது 108 முறை உச்சரிக்கலாம். 108 முறை உச்சரிக்க முடியாதவர்கள் 48 முறை உச்சரித்தால் போதுமானது. மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது பொதுவாகவே மனம் ஒரு நிலைப்பட்டு இருக்க வேண்டும். அலை பாயக்கூடாது. இறை சிந்தனையில் முழுமையாக மூழ்கி இருக்க வேண்டும். உண்மையான பக்திக்கு என்றுமே இறைவன் அருள் புரிவார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

Hanuman mantra1

ஹனுமன் மந்திரம்:
”ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே!
ஆதி வராஹாய பஞ்சமுஹி ஹனுமதே!
லம்லம் லம்லம் ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹ!!”

arasa-ilai

ஹனுமன் சன்னிதிக்குச் செல்ல முடியாதவர்கள் அதற்கு மாற்றாக அரசமரத்தை அனுமனாக நினைத்தும் அரச மரத்தடியில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி செவ்வாய்க்கிழமை அன்று வரும் வளர்பிறையில் இந்த மந்திரத்தை ஒருமுறை மனமார வழிப்பட்டு உச்சரித்து வந்தாலே இருக்கின்ற பல கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்பு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
காலை எழுந்து குளித்த உடன், இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களின் பக்கத்தில் தோல்வியும், துரதிர்ஷ்டம் நெருங்கக் கூட முடியாது. வெற்றியே விரும்பி உங்கள் பக்கம் வந்து விடும் என்றால் பாருங்களேன்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.