அட, தூக்கம் வரவில்லை என்ற கவலை ஒரு போதும் இனி உங்களுக்கு வேண்டாம். கண்களைமூடி இவரது பெயரை 11 முறை உச்சரியுங்கள், தூக்கம் மன நிம்மதியோடு சேர்ந்து வரும்.

hanuman-sleep

இன்றைய சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் தூங்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. பகல் முழுவதும் அசதியாக வேலை செய்து வீடு திரும்பிய பின்பும், இரவு தூங்குவது கிடையாது. வேலை செய்யாமல் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால், அவர்களில் சில பேர் காலை கண் விழிக்கவே காலை 11 மணி ஆகிவிடுகிறது. மீண்டும் பகல் தூக்கம் இருக்கும். நிச்சயமாக இரவு தூக்கம் கெட்டுப் போகத்தான் செய்யும்.‌ பகல் நேரங்களில் எவ்வளவுதான் தூங்கினாலும், அது இரவு தூக்கத்திற்கு சமமாகாது.

sleep1

வேலைக்கு சென்று வருபவர்களுக்கு இரவு நேரத்தில் தூங்க வில்லை என்றால், பகல் நேரத்தில் தூங்கும் சந்தர்ப்பமும் கிடைக்காது. இரவில் பாதி நேரம் தொலைக்காட்சியிலும், கைபேசியிலுமே நேரத்தை கழித்து விடுகிறார்கள். இவர்கள் ஒரு ரகம். இன்னும் சில பேருக்கு பிரச்சனை! பிரச்சனை! பிரச்சனை! எதைத் தொட்டாலும் பிரச்சனை மனக்கவலை என்று மனதை குழப்பிக் கொண்டே இரவில் தூங்காமல் தவித்த வருவார்கள். இவர்கள் ஒரு ரகம்.

சிலபேருக்கு உடல்ரீதியான பிரச்சனை இருக்கும். உடல் உபாதைகளால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சங்கடப் படுவார்கள். இதில் எந்த காரணத்தினால் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும் சரி, நீங்கள் இரவில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும். மனது நிம்மதி பெறும். அமைதியான தூக்கம் உங்களது கண்களை தழுவும்.

hanuman-heart

எந்த ஒரு கவலையையும் எந்த ஒரு கஷ்டத்தையும் தூக்கி எறியக் கூடிய சக்தி ஹனுமனுக்கு உண்டு. ஹனுமனின் பெயரை உச்சரித்தாலே எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற மன தைரியம் நமக்குள் வந்துவிடும். மனம் உறுதி பெறும். தூங்கச் செல்வதற்கு முன்பு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். வெறும் பத்து முறை, உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மூச்சை உள்வாங்கி மூச்சை வெளி விடுங்கள். மீண்டும் மூச்சை உள்வாங்கி மூச்சை வெளியிடுங்கள்.

அதன் பின்பு கண்களை மூடிக்கொண்டு, உங்களது கண்களின் முன்பு ஆஞ்சநேயரின் உருவத்தை கொண்டு வரவேண்டும். மனக் கண்களால் ஹனுமனை காண வேண்டும். ‘ஹனுமனே துணை’ என்ற மந்திரத்தை மனதில் உச்சரிக்கலாம். அப்படி இல்லை என்றால் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை மனதில் 27 முறை உச்சரித்து விட்டு, அதன் பின்பு தூங்கச் செல்லுங்கள்.

hanuman

விடிகின்ற பொழுது உங்களுக்கே வெற்றி, என்ற நினைப்போடு ஹனுமனை பிரார்த்தனை செய்து தூங்கச் சென்றால் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக கட்டாயம் தூக்கம் வரும். நம்பிக்கையோடு செய்ய வேண்டும் என்பதை இந்த இடத்தில் நீங்கள் மறக்கக்கூடாது. கோடி ரூபாய் சம்பாதித்தாலும் நிம்மதியான தூக்கம் ஒரு மனிதனுக்கு இல்லை என்றால் அந்த வாழ்க்கை நரகமாகி விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.