நீங்கள் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் பெற வேண்டுமா? இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்.

hanuman1-1

நம்மில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு தவறை மற்றவர்களுக்கு செய்திருப்போம். அல்லது நாம் செய்த ஏதாவது ஒரு செயலினால் மற்றவர்கள் பாதிப்படைந்திருபார்கள். சிலருக்கு சூழ்நிலை காரணமாக அடுத்தவர்களை காட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமை கூட வந்திருக்கும். மனசாட்சிக்கு எதிராக, சூழ்நிலை காரணமாக செய்த ஒரு தவறினை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அந்த மன வருத்தத்தில் இருந்து உங்களை மீட்டு மன அமைதி தரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று நினைத்தால் அதற்கு அந்த அனுமனை வழிபட வேண்டும்.

hanuman

அனுமனை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை, 48 நாட்கள் உச்சரித்து வந்தால் உங்களின் குற்ற உணர்ச்சியிலிருந்து நீங்கள் மீண்டு விடலாம். உங்களுக்கான ஹனுமனின் மந்திரம் இதோ.

‘ஓம் சங்கட மோக்ஷ் ஆஞ்சநேயாய நமஹ’

hanuman

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் உங்கள் மனதில் உள்ள தேவையில்லாத பயமானது நீக்கப்பட்டு தைரியமாக செயல்படும் திறனை அளிக்கும். மந்திரத்தை சொல்லி கடந்து வரும் ஒவ்வொரு நாளில் இருந்தே நல்ல முன்னேற்றத்தை அடைவதை உங்களால் உணர முடியும். மனதார முழு நம்பிக்கையுடன் மந்திரத்தை உச்சரித்து நிம்மதியான வாழ்வினை பெற அந்த ஹனுமனை வேண்டிக்கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
அய்யனார் மூல மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Hanuman manthiram. Hanuman mantras Tamil. Hanuman manthiram tamil. Hanuman valipadu Tamil. Hanuman slokas.