அய்யனார் மூல மந்திரம்

Ayyanar1

பழங்காலத்திலிருந்தே அய்யனாரின் வழிபாடு தமிழர்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பாரம்பரியமாக அய்யனாரை வழிபட்டு வருகின்றனர். சிவனுக்கும், மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் அய்யனார் என்று கூறப்படுகிறது. அய்யனாரை பல கிராமங்களில் குலதெய்வமாக வழிபட்டு வருவது, வழக்கத்தில் இன்றளவும் இருந்துவருகிறது.

Ayyanar

அய்யனாரை பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் தோற்றம் இருந்தாலும், அவரை மனதார வேண்டி கொண்டு நாம் தொடங்கும் காரியமானது எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியில் முடியும். அதுமட்டுமல்லாமல் இவர் கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருக்கின்றார். காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து கிராம மக்களை எல்லாம் காக்கும் இந்த அய்யனாரின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ‘அய்யனார் மூல மந்திரத்தை’ உச்சரிப்பது மேலும் அதிக பலனை கொடுக்கும். உங்களுக்கான அய்யனாரின் மூல மந்திரம் இதோ..

ஓம் கிராமபாலாய வித்மஹே
கிலேஸ நாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்

Ayyanar3

அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது. மனோதைரியமானது அதிகமாகும். அய்யனாரை தொடர்ந்து வழிபட்டு வர நம் வீட்டையும், நம் வீட்டைச் சேர்ந்த மக்களையும் பேய், பிசாசு, காத்து, கருப்பு கூட அண்டாது என்பது நம்பிக்கை. வீரத்தையும், துணிச்சலையும், அடையாளமாக கொண்டிருக்கும் அய்யனாரின் அருளை முழுமையாகப் பெற இந்த மூல மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்போம்.

இதையும் படிக்கலாமே
துயரங்களை தீர்க்கும் வராஹ ஸ்தோத்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ayynar moola mantra in Tamil. Ayyanar moola manthiram in Tamil. Ayyanar swamy mantram. Lord ayyanar mantra in Tamil.