திருமணமான பெண்கள் எல்லோருமே திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகும் திறமையாக குடும்பத்தை நடத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சில பேருக்கு குடும்பத்தை திறமையாக எப்படி வழி நடத்துவது என்று தெரிந்திருக்கும். சில பேருக்கு குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்ல முடியாமல் கொஞ்சம் தடுமாறுவார்கள். திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த இரண்டு பொருளை கோர்த்துக் கொண்டால் போதும் புகுந்த வீட்டை சுலபமாக சமாளித்து விடலாம். அது எந்த பொருட்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருமாங்கல்யத்தில் கோர்க்க வேண்டிய பொருட்கள்
உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் தெளிவாக இருக்க வேண்டியது மனம். எந்த இடத்தில் மனம் குழம்பி போகின்றதோ அந்த இடத்தில் நிச்சயமாக தடுமாற்றம் வரும். குறிப்பாக பெண்கள் மனதை குழம்ப விடவே கூடாது. எந்த நேரத்திலும் தெளிவாக இருக்க வேண்டும். மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கிரகம் சந்திரன்.
சந்திரனுக்கு உரிய பொருள் முத்து. ஒரிஜினல் முத்தாக கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதை தங்க கம்பியிலோ அல்லது வெள்ளி கம்பியிலோ கோர்த்து கொடுப்பார்கள். அதை திருமாங்கல்யத்தில் பெண்கள் கோர்த்துக் கொண்டால் மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அவர்களுக்கு வராது. குழப்பமான நிலையில் கூட அவர்கள் எப்போதும் தெளிவான முடிவை எடுப்பார்கள்.
கணவன் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது புகுந்த வீட்டு உறவுகள் செய்யக்கூடிய பிரச்சனையாக இருக்கட்டும், காசு பணத்தின் மூலம் வரக்கூடிய பிரச்சனையாக இருக்கட்டும், மனது தெளிவாக இருக்கும் போது நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் எப்போதுமே சரியாக இருக்கும். ஆகையுங்கள் மனதை தெளிவுபடுத்தக்கூடிய இந்த முத்துவை உங்கள் திருமாங்கல்யத்தோடு கோர்த்துக் கொள்வது சிறப்பு.
அடுத்தபடியாக எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு வேண்டுதல் தன்னுடைய கணவர் தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான். இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய பொருள் பவளம். பவளம் சிவப்பு நிறத்தை கொண்டது. அது அங்காரகனுக்கு உரியது. இந்த பவளத்தை பெண்கள் அணிந்து கொண்டால் குறிப்பாக கோபம் வராது. கோபப்படாத பெண்களே நிச்சயமாக இந்த உலகத்தில் இருக்க முடியாது.
அதாவது ஒரு பெரிய பிரச்சனை வருவதற்கு காரணம் முன் கோபம் தான். அவசர அவசரமாக கோபப்பட்டு அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்துவிட்டு பிறகு நின்று நிதானமாக யோசிப்பார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முன் கோபத்தை குறைக்கவும் நோய் நொடி இல்லாமல் வாழவும் தீர்க்க சுமங்கலி யோகத்தை பெறவும் இந்த பவளத்தை தாலியோடு கோர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு முத்து ராசியாக இருக்காது. சிலருக்கு பவளம் ராசியாக இருக்காது. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது? உங்களுடைய ஜோதிடரை அணுகி உங்கள் ராசிக்கு முத்தும் பவளமும் நீங்கள் போட்டால் எந்த பிரச்சனை இருக்காது என்றால் தாராளமாக போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இஷ்டமில்லை எனும் பட்சத்தில் மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். நவகிரக சன்னதி இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகனை வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. இதை செய்தால் உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: கிரக கோளாறு நீங்கும் துளசி தீர்த்தம்
திருமண வாழ்க்கை சந்தோஷமாக நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அனைவருமே இந்த வழிமுறையை பின்பற்றினால் போதும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.