உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம். நம்மிடம் இந்த பலம் இருக்கிறது இதன்மூலம் நாம் கோப்பையை வெல்வது உறுதி – ஹர்பஜன் சிங் பளீர்

harbajan

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
worldcup

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கூறியதாவது : இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டியில் ஜூன் 16ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் மோதுகிறது. அந்த போட்டியினை இந்திய அணி தவிர்த்தால் புள்ளிகள் குறையும் ஆனால், இந்திய அணி மற்ற அனைத்து அணிகளையும் தோற்கடிக்கும் பலம் உள்ளது. எனவே, தற்போது நம் அணி மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும்.

Ind-Pak
இந்த உலகக்கோப்பை தொடரை நாம் நிச்சயம் கைப்பற்றுவோம். இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாமலும் நம் அணிக்கு கோப்பையை வெல்லும் முழு பலம் உள்ளது. என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

நான் இந்திய அணிக்காக விளையாடப்போகிறேன் என்பதை நம்பமுடியவில்லை. மேலும், இது உண்மையா என்று இவர்கள் மூலமே எனக்கு தெரிய வந்தது – இளம் சுழற்பந்து வீச்சாளர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்