நான் இந்திய அணிக்காக விளையாடப்போகிறேன் என்பதை நம்பமுடியவில்லை. மேலும், இது உண்மையா என்று இவர்கள் மூலமே எனக்கு தெரிய வந்தது – இளம் சுழற்பந்து வீச்சாளர்

Team

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

indian-team

ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 அணியில் இடம்பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரரான மாயங்க் மார்கண்டே நேற்று ஒரு பேட்டி அளித்தார். அதில் பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் மார்கண்டே கூறியதாவது : நான் மைசூர் போட்டியில் விளையாடி விட்டு ஹோட்டல் அறைக்கு வந்தேன். அப்போது என் மொபைலில் தொடர்ந்து பல அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள்(மெசேஜ்) வந்திருந்தன. அதில் நான் இந்திய அணிக்காக தேர்வானதுக்கு வாழ்த்துக்கள் என்று அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை எனக்கு தெரிவித்து இருந்தனர்.

markande

அனால், நான் அதிர்ச்சி அடைந்தேன் என்னால் நம்பவே முடியவில்லை நான் இந்திய அணிக்காக ஆடப்போகிறேன் என்று, பிறகு பி.ஐ.ஐ.சி ட்விட்டர் பக்கத்தில் பார்த்த பிறகுதான் நான் இந்திய அணிக்கு தேர்வானதை நம்பினேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : க்ரிக் பஸ் மற்றும் டி ஸ்போர்ட்ஸ் ஆகிய கிரிக்கெட் நிறுவனங்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்