ஹார்டிக் பாண்டியா இப்படி பட்டவர் தான். இப்படித்தான் பேசுவார் – பாண்டியாவின் தந்தை பேட்டி

father

சென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் இந்திய அணியின் வளரும் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரிலும் அவரை நீக்கியது இந்திய அணி. மேலும், அவர் விளக்கத்தினை அணி நிர்வாகம் ஏற்கவில்ல

KL and HP

உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் இது அவருடைய கிரிக்கெட் வாழ்வின் மோசமான தருணமே இது அவருக்கு பின்னடைவே. இருப்பினும் அவர் அணியில் உள்ள இளம்வீரர்களில் சிறந்த ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பாண்டியாவின் தந்தை பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஹார்டிக் பாண்டியா இளமையிலிருந்தே மனதில் எதை நினைக்கிறானோ அதனை வெளிப்படையாக பேசும் குணமுடையவர். மேலும், அவரிடம் நீங்கள் பழகினால் அவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குழந்தை மாதிரி மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு எதையும் பேசமாட்டார். எதை நினைக்கிறாரோ அதனை முகத்துக்கு நேராக தைரியமாக பேசக்கூடிய ஒருவர்.

hardik

அதனாலேயே அந்த நிகழ்ச்சியில் ஓப்பனாக பேசினார். மேலும், அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதனால் சுவாரசியமாக இருக்க எண்ணியே அவர் அப்படி பேசி இருப்பார் என்று பேசிய பாண்டியாவின் தந்தை, இந்த பிரச்சனை பெரியதாக மாற்றாமல் அணியில் அவரை இணைத்துக்கொள்ளும்படி அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித். இப்படி ஒரு சாதனையா?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்