IPL 2019 : வலைப்பயிற்சியில் தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ஹார்டிக் பாண்டியா – வைரல் வீடியோ

- Advertisement -

இந்த ஆண்டு 11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. வழக்கமாக துவக்க விழா கோலாகலமாக நாடக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்க விழா செலவினை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவத்தினர் குடும்பத்திற்கு அந்த தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

ipl

இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோன்று இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருந்த ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா தற்போது தனது பயிற்சியினை துவங்கியுள்ளார்.

- Advertisement -

இப்போது அவர் தனது வலைப்பயிற்சியினை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பயிற்சியின் போது பாண்டியா தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அடிக்கிறார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகள் அடுத்து இந்திய அணி உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் பாண்டியா இந்திய அணியின் முக்கிய வீரராக இந்திய அணியில் திகழ்வார் என்று பலரும் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

Mike Hussey : சென்னைக்கு வருகை தந்த மைக்கல் ஹஸ்ஸி – காரணம் இதுதான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -