2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியில் ஆட வேண்டும் – கிளார்க் கருத்து

clarke

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

indian-team

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு டாக் ஷோவில் இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டரும் இளம் வீரருமான ஹார்டிக் பாண்டியா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையாக பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததால் இந்திய அணியில் இருந்து பாண்டியா நீக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட பாண்டியா நியூசிலாந்து தொடரிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்படும் அணியில் அவர் பெயர் இடம்பெறுமா என்று தெரியவில்லை. ஆனால், பாண்டியாவிற்கு பலரும் ஆதரவு கரத்தினை நீட்டிவருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தற்போது பாண்டியா குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

hardik

கிளார்க் பேசுகையில் : பாண்டியா இளம் வீரர் மேலும், இப்போது உள்ள அணியில் சரியான ஆல்ரவுண்டர் என்றால் அது பாண்டியா மட்டுமே அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அதோடு, அவரால் பந்துவீசவும் முடியும் எனவே அவரது எதிர்காலம் மற்றும் அணியின் நலன் கருதியும் அவரை விரைவில் அணியில் சேர்க்க வேண்டும். அவரது கிரிக்கெட் பயணம் நிச்சயம் நீண்ட காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் என்று கிளார்க் கூறினார்.

இதயம் படிக்கலாமே :

தோனி. தோனி என்று மெல்போர்ன் மைதானத்தை அதிர வைத்த ஆஸி ரசிகர்கள் – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்