தோனி. தோனி என்று மெல்போர்ன் மைதானத்தை அதிர வைத்த ஆஸி ரசிகர்கள் – வைரல் வீடியோ

msd

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடு கிரிக்கெட் வீரர்களும், உலகின் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் இந்திய அணியை சமூக வலைத்தளம் வாழ்த்திய படி உள்ளனர்.

இந்திய அணிக்கான அடுத்த சுற்றுப்பயணம் நியூசிலாந்து. இதற்கான இந்திய அணி நியூஸிலாந்து சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணிவீரரான தோனி 87ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் அந்த போட்டியில் களமிறங்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி தோனி என்று கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர். இந்திய வீரருக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த இந்த வரவேற்பு விடியோவாக வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :

சச்சினுக்கு அடுத்து தோனிக்கு மட்டுமே இந்த அளவிற்கு வரவேற்பு வெளிநாட்டு மைதானத்தில் கிடைத்திருக்கிறது. இந்த தொடரே ஆஸ்திரேலிய மைதானத்தில் அவரது கடைசி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வென்று இவருக்கு பரிசளிக்கும் – சச்சின்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்