ஹார்டிக் பாண்டியாவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத்தொடரிலும் இருந்தும் வெளியேற்றிய பி.சி.சி.ஐ – காரணம் இதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு

hardik
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni

இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கோடரிலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவை பி.சி.சி.ஐ ஒருநாள் தொடர் மற்றும் டி20 என முழுத்தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இத காரணத்தினை பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹார்டிக் பாண்டியாவிற்கு முதுகின் கீழ்ப்பகுதி தசைப்பிடிப்பு காரணமாக சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வருவதாலும், மேலும், வலியின் தன்மை அதிகரிக்க கூடாது என்பதற்காகவும் இந்த முழுத்தொடரில் இருந்தும் பாண்டியாவிற்கு ஓய்வினை தந்துள்ளது பி.சி.சி.ஐ. இதோ அந்த பதிவு :

- Advertisement -

உலகக்கோப்பை அருகில் வைத்துக்கொண்டு அவரின் உடல்நிலையோடு விளையாடக்கூடாது என்பனதற்கா அவருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தசைப்பிடிப்பு முற்றிலும் குணமடைந்து அவர் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே :

அடித்தது மொத்தம் 12 சிக்ஸர் அதில் இத்தன பாலா காணாமல் போகும். கிறிஸ் கெயிலை கடிந்த மைதான நிர்வாகம் – ராட்சஸ சிக்ஸர்கள் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -