அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச் செய்யும் பரிகாரங்கள்

chandra

பயிர்கள் நன்கு வளர சூரிய ஒளியும், தண்ணீரும் மிகவும் அவசியம். பகற்பொழுதில் சூரியனின் வெப்பம் பயிர்களுக்கு எவ்வாறு உதவுகிறதோ, அதே போன்று இரவு நேரத்தில் முழு சந்திரனின் ஒளியும் தாவரங்களுக்கு நன்மையைத் தருகிறது, குறிப்பாக தாமரை, அல்லி போன்ற நீர் குளங்களில் வளருகின்ற செடிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. பௌர்ணமி இரவில் மலரும் அந்த மலர்களின் அழகில் மயங்காத மனிதர்களே இல்லை. இதனால் தான் நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என நமது முன்னோர்கள் வகைப்படுத்தினர். அப்படியான சந்திரன் பகவானின் ஆதிக்கத்தில் வரும் ஒரு நட்சத்திரம் தான் “அஸ்தம்” நட்சத்திரம். இந்த அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் மிகுதியாக ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord-Chandra

27 நட்சத்திரங்களின் வரிசையில் பதிமூன்றாவது நட்சத்திரமாக வருவது அஸ்தம் நட்சத்திரம் ஆகும். இந்த அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் தேவதையாக சாஸ்தா தெய்வம் இருக்கிறார். அஸ்த நட்சத்திரம் கன்னி ராசிக்குரிய ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. கன்னியின் ராசியின் அதிபதியான புதன், அஸ்த நட்சத்திர அதிபதியான சந்திரன் ஆகிய இரு கிரகங்களின் தன்மை இருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக சிறந்த அறிவாளியாகவும், பல விடயங்களை கற்றறிந்த பண்டிதர்களாகவும் இருப்பார்கள். இந்த அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான செல்வங்களையும், அதிர்ஷ்டங்களையும் ஈட்டுவதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிக சிறப்பான பலன்களை பெறுவதற்கு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு வளர்பிறை திங்கள் கிழமை தினத்தில் சென்று, அங்குள்ள சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வழிபாடு செய்யவேண்டும். பின்பு சந்திர பகவானுக்கும் அபிஷேகங்கள் செய்து வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை 6 மாதத்துக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை செய்வது நன்மை பயக்கும்.

Thiruverumbur sivalingam

ஒவ்வொரு மாதமும் வருகின்ற பிரதோஷ தினங்கள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் வாழ்வில் இடர்கள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் ஏற்படும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற வஸ்திரங்கள் அணிந்து கொள்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருகும். மாதத்திற்கு ஒரு முறை ஏழை மக்களுக்கு உங்கள் கைப்பட செய்த எந்த ஒரு வகையான உணவையும் அன்னதானம் தருவதால், உங்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கி வாழ்வில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். மேலும் ஏழை மக்களுக்கு உங்கள் பிறந்த தினத்தில் முழுமையான வெள்ளை நிற ஆடைகளை வஸ்திர தானம் தருவது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்பட்ட பிறகு நடந்த அதிசயம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hastham nakshatra dosha pariharam in Tamil. It is also called Hastham natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Chandra bhagavan natchathirangal in Tamil or Chandra natchathira pariharangal in Tamil.