ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

Hayagriva-mantra-1

மிகுந்த கல்வியறிவு படைத்தவர்களை இறைவனுக்கு நிகராக போற்றுவது நமது பண்பாடு. எல்லாவற்றிலும் இறைவனை காண முயன்ற நம் முன்னோர்கள் கலைகள் பலவற்றை உருவாக்கி, அதன் மூலம் தெய்வங்களை ஆராதித்து ஞான நிலையை அடைய முயன்றனர். இன்று பலரும் தங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்து கொள்ள பல விதமான கல்வியையும், கலைகளையும் கற்கின்றனர். ஒரு சிலர் ஞானநிலை அடைய விரும்புகின்றனர். இந்த இரு தரப்பினரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் ஹயக்ரீவ மூர்த்தி. அவரை போற்றும் ஸ்தோத்திரம் இது.

Hayagriva mantra Tamil

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹீகன்யாப்ரவாஹவத்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்ட கவாடோத்காடனக்ஷம
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.

திருமாலின் அம்சம் கொண்டவர் தான் “ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி”. ஹயக்ரீவரை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளின் கோவிலுக்கு சென்று, ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி ஏலக்காய் மலையை ஹயக்ரீவருக்கு அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தை 12 முறை துதித்தால் கல்வி மட்டும் கலைகளில் சிறக்க முடியும். எந்த ஒரு விடயத்திலும் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளும் திறன் பெற்று ஞான நிலை உண்டாகும். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

Hayagriva mantra Tamil

கல்வியறிவு பெற்ற மனிதனே முழுமையான மனிதனாக சமுதாயத்தால் மதிக்கப்படுகிறான். அந்த கல்வியறிவோடு மனிதனுக்கு பயன் தரும் கலைகளிலும் தேர்ச்சியடைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இறைவனை உணர வைக்காத எந்த ஒரு கல்வியும் உண்மையான கல்வியல்ல என்பது பெரியோர்களின் வாக்காகும். ஞான முத்திரையை ஏந்தி, சங்கு மற்றும் ஸ்ரீ சக்ரத்தை ஏந்தியவாறு வீற்றிருப்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. கல்வி, கலைகளில் தேர்ச்சி மற்றும் ஞானம் வேண்டுபவர்கள் ஹயக்ரீவரின் இந்த ஸ்தோத்திரத்தை துதிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கோமாதா ஸ்தோத்ரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புக்கள் பற்றி அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hayagreeva stotram in Tamil. It is also called as Hayagreeva slokam in Tamil or Hayagreeva mantra in Tamil or Hayagreeva slogam in Tamil.