கோமாதா ஸ்தோத்திரம்

Gomatha-manthiram

விலங்குகளில் ஒரு தனித்தன்மை வாய்ந்ததும், தெய்வீக தன்மை கொண்டதும் பசுமாடாகும். நமது புராணங்களிலும் தேவர்கள் பல நன்மைகள் பெற காரணமாக இருந்ததாக “காமதேனு” என்கிற தேவலோக பசு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பசுமாடு தீய சக்தியை விரட்டும் சக்தியை கொண்டது. தெய்வீக சக்திகளை அது இருக்கும் இடம் நோக்கி ஈர்க்க வல்லது. அப்படிப்பட்ட பசுமாட்டை வணங்கும் போது கூறி வழிபட வேண்டிய மந்திரம் இது.
gomadha 2

கோமாதா ஸ்தோத்திரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்

பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். இந்த கோமாதா ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகள் மற்றும் விஷேஷ நாட்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீட்டிலோ அல்லது கோவில்களிலோ வளர்க்கப்படும் கன்று ஈன்ற பசுமாட்டிற்கு முன்பு நின்று, இம்மந்திரத்தை 3 முறை கூறி வழிபட்டபின்பு அப்பசுமாட்டை 9 முறை வளம் வந்து, பசுமாட்டிற்கு வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை உண்ணக்கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் குடும்பத்தை அண்டியிருக்கும் எப்பேர்ப்பட்ட பாவங்கள் மற்றும் தோஷங்களும் நீங்கும். உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்பட தொடங்கும்..

Pasuசனாதன தர்மமாகிய இந்து மதத்தில் பசுமாட்டிற்கு ஒரு உயரிய தெய்வீக ஸ்தானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனித குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மார்களின் தாய்ப்பால் கொடுக்க இயலாத சமயங்களில் பசும்பால் அக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நம்மை பெற்றெடுத்த தாய்க்கு அடுத்த படியாக பசுவை கோமாதா என மரியாதையுடன் அழைக்கிறோம். பசுமாடுகள் நன்றாக பராமரிக்கப்படும் வீடுகளில் எல்லா வளங்களும் வந்து சேரும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாகும். இந்த கோமாதா ஸ்தோத்திரத்தை கூறி வழிபடுவது அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு வழங்கும்.

இதையும் படிக்கலாமே:
முயற்சிகளை வெற்றிபெற செய்யும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gomatha stotram in Tamil. It is also called as Gomatha slogam in Tamil.