- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தயிர் சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சிம்பிளான வேர்க்கடலை...

தயிர் சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சிம்பிளான வேர்க்கடலை துவையலை இப்படி சுவையாக அரைத்துக்கொள்ளுங்கள்

- Advertisement -

சாதம் செய்து குழம்பு வைத்தால் நிச்சயம் அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் பதார்த்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பதார்த்தம் காய்கறி பொரியல் அல்லது அசைவ பொரியலாக இருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் சாதம் மற்றும் குழம்பு செய்வதற்கே நேரம் மிகவும் அதிகமாகிவிடும். சாப்பிடும் நேரம் வந்தவுடன் உடனே அதனுடன் சேர்த்து சாப்பிட இவ்வாறு பொறியல் செய்வதற்கு பதிலாக சட்டென செய்யக்கூடிய இந்த வேர்க்கடலை துவையலை அரைத்துக் கொண்டால் போதும். எந்த வகையான சாதத்துடன் வேண்டுமானாலும் இதனை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் சுவையும் அவ்வளவு அருமையாக இருக்கும். வெறும் வாயிலேயே இந்தத் துவையலை அப்படியே சாப்பிட்டு விடலாம். இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். அதிலும் கலவை சாதங்களுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். நாவில் எச்சில் ஊறும் சுவையில் மிகவும் சூப்பராக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 200 கிராம், சின்ன வெங்காயம் – 3, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், பூண்டு – 2 பல், வரமிளகாய் – 5, எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பேன் வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை வேர்க்கடலை எடுத்துக் கொண்டால் அதனை முதலில் இந்தப் பேனில் சேர்த்து, 5 இலிருந்து 7 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை வேறொரு தட்டிற்க்கு மாற்றி, ஆறவைத்து கையினால் கசக்கி, தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 5 வரமிளகாய் மற்றும் அரை ஸ்பூன் தனியா சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு பல் பூண்டு மற்றும் 3 சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். நான்கு சில்லு தேங்காயை காய் துருவல் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவை அனைத்தையும் ஆற வைத்து, மிக்ஸியில் சேர்க்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையையும் இவற்றுடன் சேர்த்து, துருவிய தேங்காயையும் சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றில் தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

பிறகு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். பின்னர் இவற்றை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது தாளிப்பு கரண்டி வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இந்த வேர்க்கடலை துவையலுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

சற்று முன்