- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த ஒரு பொடியை உணவுடன் சேர்த்துக் கொண்டால் போதும். உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும்...

இந்த ஒரு பொடியை உணவுடன் சேர்த்துக் கொண்டால் போதும். உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்

- Advertisement -

“உணவே மருந்து” என்பது பழமொழி. இது வெறும் வாய்மொழி அல்ல. இதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. அவ்வாறு நமது முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் உண்ட உணவு மட்டும் தான். இன்றைய காலத்தில் இருக்கின்ற அளவிற்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகைகளையோ, பழ வகைகளையோ சாப்பிட்டெல்லாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வில்லை. அவர்கள் மூன்று வேளை உணவு மட்டுமே அவர்களுக்கு மருந்தாகவும், ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. இவ்வாறு இன்றைய காலத்தில் நோய்கள் வருவதற்கு காரணம் விளைச்சலின் வேகம் அதிகமாக இருப்பதும், அதில் அதிகப்படியான மருந்துகள் சேர்ப்பதும்தான். இவ்வாறு உணவு என்பது மருந்தாக இருந்த காலம் மாறி நோயாக மாறிவிட்டது. எனவே உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கிக் கொள்ள உணவின் மூலமே வழி தேடிக் கொள்ளலாம். அவ்வாறு இந்த எள்ளுப்பொடியை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உபாதைகள் அனைத்தும் மறைந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் படி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து – 200 கிராம், எள்ளு – 150 கிராம், வரமிளகாய் – 15, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, பெருங்காயம் – 2 துண்டு.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பேன் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள 200 கிராம் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பு நல்ல மணம் வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். பிறகு இதனை வேறு தட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுத்ததாக 150 கிராம் எள்ளு சேர்த்து, எள்ளு பொரிந்து வெடிக்கும் வரை வறுத்து, அதையும் தட்டிற்க்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் வரமிளகாய் சேர்த்து, வறுத்து தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை அனைத்து விட்டு, பெருங்காய கட்டிகள் மற்றும் உப்பு சேர்த்து, பாத்திரத்தின் சூட்டிலேயே லேசாக வறுத்து, தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, 90 சதவீதத்திற்கு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் சேர்த்து மூடி போட்டு வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து, இதனுடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அல்லது கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலை, கடுகு சேர்த்து தாளித்து, பிறகு அதில் சாதம் சேர்த்து, அதனுடன் இந்த எள்ளு பொடியைச் சேர்த்து கிளறி லஞ்ச் பாக்ஸிற்க்கும் கொடுக்கலாம். இதனை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கும் மிகுந்த ஆரோக்கியம் கொடுக்கும்.

சற்று முன்