நாம் ஒவ்வொருவரும் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி இளமையாக இருப்பதற்கு நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றினாலும் நாம் உணவில் கவனம் செலுத்தினால்தான் அந்த ஆரோக்கியம் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் இந்த ஒரு பாலை நாம் தினமும் காலையில் குடித்து வந்தோம் என்றால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு சருமமும் முடியும் என்றும் இளமையாக இருக்கும். அந்த பாலை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆரோக்கியமான முடியை பெற
அழகாக இருக்க வேண்டும், சருமம் இளமையாக இருக்க வேண்டும், முடி உதிரக்கூடாது, முடி நன்றாக அடர்த்தியாக வளர வேண்டும் என்று பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்றால் நாம் முகத்திற்கும் தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நம்முடைய உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
நம்முடைய சருமமும் முடியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்பு சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் நமக்கு எந்த வித குறைவும் இல்லாமல் கிடைக்க வேண்டும். இவை அனைத்தையும் நாம் ஒருசேர பெற வேண்டும் என்றால் நம்முடைய உணவுப் பொருட்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் அன்றாடம் நாம் நம்முடைய உணவில் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் நிறைந்த கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை, அசைவம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்கும் பட்சத்தில் தினமும் பயறு வகைகளையும், பருப்பு பொடி, பருப்பு சாதம் போன்றவற்றையும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதோடு கருவேப்பிலையை தங்களுடைய உணவில் துவையலாக தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலமும் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இவை அனைத்தையும் தனித்தனியாக செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான ஒரு பாலை தினமும் அருந்தி வந்தாலே அவர்களுடைய உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
இதற்கு நாம் முதல் நாள் இரவே எட்டு பாதாம் பருப்பு, ஒரு பெரிய ஸ்பூன் அளவிற்கு பூசணி விதை, அதே அளவு சியா விதைகள், 2 பேரிச்சம்பழம், 20 உலர் திராட்சை போன்றவற்றை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அறிந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் காய்ச்சிய ஒரு டம்ளர் பாலை ஊற்றி ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு, தேன், வெல்லம் போன்ற எவற்றை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி நாம் தயார் செய்த இந்த பாலை தினமும் காலையில் டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக அருந்துவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்க பெற்று சருமமும் ஆரோக்கியமாக இருக்கும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் இளமையாகவும் திகழ்வோம்.
இதையும் படிக்கலாமே:முக சிவப்பழகுக்கு எளிய ஜூஸ்
கடைகளில் விற்கக்கூடிய வெளிப்புறத்தில் தடவ கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நம்முடைய அழகை நாம் பராமரிக்க முடியாது. சத்தான ஆகாரங்களை உண்பதன் மூலம்தான் நம்முடைய இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.