- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுக சிவப்பழகுக்கு எளிய ஜூஸ்

முக சிவப்பழகுக்கு எளிய ஜூஸ்

- Advertisement -

முகம் நல்ல கலராக சிகப்பாக மாறுவதற்கு பியூட்டி பார்லருக்கு போய் என்னென்னமோ செய்து கொள்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து முகம் அழகு பெறுவதற்கு மெனக்கெடும் நேரத்தில் இயற்கையான முறையில் நம் மெலனின் உற்பத்தியை சீர் செய்து, முகத்தை உள்ளிருந்து மேனிக்கு பளபளப்பை கொடுத்து சிகப்பழகாக செய்ய என்ன செய்யலாம்? எனும் ரகசியத்தை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

நாம் அன்றாட உணவில் பழங்கள் பொதுவாக அதிகம் எடுத்துக் கொள்வதால், மேனிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். தேகம் பளபளக்க அதிகம் பழ ரசங்களை உள்ளுக்கு எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் முகத்திற்கு வெளியேவும் பழரசங்களை பயன்படுத்துவதால் மேனியை இயற்கையாக ஆரோக்கியமானதாக மாற்றலாம். அந்த வகையில் இந்த ஒரு பழ ரசம் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர முகத்திற்கு நல்ல ஒரு சிகப்பழகு கூடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

- Advertisement -

கருப்பு திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கருப்பு திராட்சை விதைகளுடனும், விதைகள் இல்லாமலும் இருக்கும். நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கருப்பு திராட்சை என்றால் பன்னீர் திராட்சை கிடையாது. பச்சை திராட்சை போலவே கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிற உலர் திராட்சைகளும் இருக்கின்றன. கருப்பு நிற உலர் திராட்சைகளை இரவில் அலசி சுத்தம் செய்து ஊற வைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து காலையில் பருகி வர தேகம் நல்ல ஆரோக்கியம் பெறும். அது மட்டும் அல்லாமல் உடலில் இருக்கக் கூடிய ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

பிரஷ்ஷான கருப்பு திராட்சைகளை 48 நாட்களுக்கு சர்க்கரை எதுவும் சேர்க்காமல் ஜூஸ் போட்டு அப்படியே குடிக்க வேண்டும். இந்த திராட்சை ஜூஸ் பருகும் சமயத்தில் நீங்கள் டீ, காபி போன்ற எந்த விதமான விஷயங்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து ஒரு நாள் விடாமல் காலையில் எழுந்ததும் முதல் உணவாக இந்த திராட்சை ஜூஸை பருகுங்கள். 48 நாட்கள் கழித்து உங்களுடைய முகமா இது! என்று நீங்களே சந்தேகப்படும் அளவிற்கு உங்களுடைய முகம் நல்ல ஒரு ஆரோக்கியமான சிகப்பழகை பெற்றிருக்கும்.

- Advertisement -

ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களால் மேனியில் இருக்கும் நிறம் மங்குகின்றது. மேலும் முகப்பருக்களும், வறண்ட தேகமும் இதனால் தான் ஏற்படுகின்றது. கருப்பு திராட்சை உடலுக்கு உள்ளே சென்று ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்யக் கூடிய அற்புதமான ஒரு பொருள் கருப்பு திராட்சை. மேலும் இது இயற்கையான ஆக்சிஜனேற்றத்தை செய்கிறது.

இதையும் படிக்கலாமே:
காரியத் தடைகளை தகர்க்கும் விநாயகர் மந்திரம்

கருப்பு திராட்சையில் ஏராளமான பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது சோடியம் அளவை குறைக்கும். கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதில் இருக்கும் நார் சத்து மற்றும் நீர் சத்து போன்றவை குடலை சுத்தமாக்க உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி ஆகிய சத்துக்களுடன், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஏராளமாக நிரம்பியுள்ளதால் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த ஒரு பழ ரசம் உடலை முழுமையாக சுத்தம் செய்வதால் தேகமும் சிகப்பழகாக விரைவிலேயே மாறும், நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள், பலன் பெறுங்கள்.

சற்று முன்