மாலை நேரத்தில் உங்க வீட்டில் இந்த 4 பொருள் இருந்தா போதும் 10 நிமிஷத்துல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெடி! ஒரு வாட்டி செஞ்சா திரும்பத்திரும்ப கேட்பாங்க.

paruppu-bonda-recipe
- Advertisement -

ஆரோக்கியம் மிகுந்த ஸ்னாக்ஸ் வகை ஒன்று மிக எளிதாக தயாரிக்க இருக்கிறோம். அரிசி, பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்னாக்ஸ் வகை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்கக் கூடியது. மாலையில் டீயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ரொம்பவே அருமையான ஒரு உணர்வை கொடுக்கும். சுவையான இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆரோக்கியம் மிகுந்த பருப்பு போண்டா எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம்.

பருப்பு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், உளுத்தம் பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், பூண்டு பற்கள் – 7, இஞ்சி – 2 இன்ச், பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை – சிறிதளவு, சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

பருப்பு போண்டா செய்முறை விளக்கம்:
ஆரோக்கியம் மிகுந்த இந்த பருப்பு போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசியை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே கப் அளவிற்கு மற்ற பொருட்களையும் அளந்து எடுக்க வேண்டும். பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகிய இந்த பருப்பு வகைகளை தலா கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எல்லா பொருட்களையும் ஒன்றிரண்டு முறை நன்கு தண்ணீரில் அலசி வடித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதும். ரொம்பவே ஆரோக்கியம் மிகுந்த இந்த ஸ்னாக்ஸ் வகையை சுலபமாக செய்து விடலாம். ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடித்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏழு பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோலுரித்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இவற்றை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. அரைத்து எடுத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை பொடித்து சேருங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பை இப்போது போட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவை நன்கு கலந்த பின்னர் இட்லி மாவு பதத்திற்கு வந்திருக்க வேண்டும். அதனால் தண்ணீரை அதிகம் சேர்க்காமல் கெட்டியான பதத்திற்கு வருமாறு தண்ணீரை தெளித்து தெளித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பின்பு ஒரு ஒரு குழிகரண்டியாக மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றினால் அப்படியே மிதந்து கொள்ளும். ஒன்று மிதந்து வந்த உடன் இன்னொன்றை ஊற்றுங்கள். இப்படி எல்லா மாவையும் ஊற்றி இருபுறமும் நன்கு வேக எடுத்துப் பார்த்தால் வெளியில் க்ரிஸ்பியாவும் உள்ளே மிருதுவாகவும் சூப்பரான பருப்பு போண்டா தயார் ஆகி விட்டிருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -