தொழில் தொடங்கவும், பணம் சம்பாதிக்கவும் வயது ஒரு தடையே இல்லை. வயசாயிடுச்சு இனிமே நாம் சாதிக்க என்ன இருக்கு! என்று சிந்திக்கும் பெண்கள் இவங்களோட கதையையும் கொஞ்சம் கேளுங்க!

hemas-kitchen
- Advertisement -

சில பெண்களுக்கு சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே இயற்கையாகவே வந்துவிடும். ஆனால் சில பெண்களுக்கு வாழ்க்கையில், சில கஷ்டங்களை அனுபவித்த பின்பு தான் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் சம்பாதிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள மாட்டார்கள். காரணம் அந்த பெண்ணுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும்போது, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும். ‘இந்த வயதில் நம்மால் என்ன சாதிக்க முடியும்!’ என்ற எண்ணமும் கூடவே வரும். இப்படிப்பட்ட எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை இன்றே தூக்கி போட்டு விடுங்கள். இவங்களோட கதையை கொஞ்சம் கேளுங்கள். உங்களுடைய மனதிலும் நிச்சயம் மாற்றம் எழும். எதையாவது சாதித்து ஆகவேண்டும் என்ற வெறி உங்களை முன்னேற்றம் அடையச் செய்யும்.

யூடியூபில் சமையல் சம்பந்தப்பட்ட வீடியோக்களை போட்டு 1 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை சேர்த்து வைத்திருக்கும் Hema’s kitchen, ஹேமா அவர்களை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் அருப்புக்கோட்டையில் பிறந்து வளர்ந்து தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, காதல் திருமணமும் செய்து தன்னுடைய வாழ்க்கையை சாதாரணமாக நடத்தி வந்தவர் தான் இந்த ஹேமா‌.

- Advertisement -

வழக்கம்போல திருமணம் ஆன பின்பு எல்லா நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வரக்கூடிய பிரச்சனைகளை தான் ஹேமாவின்‌ குடும்பமும் எதிர்கொண்டது. கணவரின் குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை சரியான முறையில் நடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை. வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்ன செய்வது? கணவருக்கு வரக்கூடிய குறைந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை எப்படி நடத்திச் செல்வது.

எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய ஆசை ஹேமாவின் மனதிலும் தோன்றியது. தன் கணவர் சுமக்கும் குடும்ப பாரத்தை ஹேமாவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஏதாவது ஒருவகையில் தன்னுடைய கணவருக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டுமென்று இவர்களுடைய மனதிலும் ஆசை எழுந்தது. தன்னுடைய 40 வது வயதில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

- Advertisement -

ஒரு சிறிய முதலீட்டை, முதலீடாக வைத்து, புடவை பிசினஸ் ஆரம்பிக்கிறாங்க. ஆனால், கொஞ்ச நாளிலேயே அதில் பெரிய நஷ்டம். அடுத்தபடியாக அழகு பொருட்களை விற்கும் வேலையை தொடங்கினார்கள். ஆனால் அதிலும் எதிர்பார்க்காத அளவு நஷ்டம். மூன்றாவது முறையாக சிறிய அளவில் மெர்ஸ் ஆரம்பிச்சாங்க. இவங்க நினைத்தபடி மூன்றாவது ஐடியா நல்லாத்தான் வொர்க்கவுட் ஆச்சு. ஏனென்றால் இவர்களுக்கு ருசியாக நன்றாக சமைக்கத் தெரியும்.

ஆனால் மெர்ஸை இவர்களால் சரியான முறையில் நடத்திச் செல்ல முடியவில்லை. ஒரு தனியாளாக அந்த மெர்சை சமாளிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தது. மெர்ஸ் தொழிலும் ஹேமாவை கைவிட்டுடிச்சு. நான்காவதாக இவர்கள் சமைத்த வீடியோக்களை அவங்களோட ஃபேஸ்புக்கில் போட்டாங்க. இவங்களோட சமையல் வீடியோவை எல்லோரும் விரும்பி பார்க்க ஆரம்பிச்சாங்க.

- Advertisement -

அதன் பின்புதான் தன்னுடைய 43வது வயதில், 2016 ல் யூட்யூபில் ஒரு சேனலை ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால் இதிலும் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. நம்முடைய முகத்தை எல்லோரும் பார்ப்பார்களா. நம்மால் இந்த சேனலை சக்ஸஸாக ஆக நடத்திச் செல்ல முடியுமா? என்று யூடியூப் சேனலை ஆரம்பித்து ஒருவருடம் வீடியோவை போடாம இருந்திருக்காங்க.

அடுத்தபடியாக தன்னுடைய 44வது வயதில் 2017ல் வீடியோ போட தொடங்கி இருக்காங்க. ஆனால், இவர்களிடம் சமைப்பதற்கு புது பாத்திரங்கள் இல்லை. ‘என்ன பழைய பாத்திரத்தில் சமைக்கிறாரீங்க!’ என்று வரும் கமெண்ட். இதை சமாளிக்க என்ன செய்வது. அடுத்தபடியாக தன்னுடைய கணவரிடம் தயங்கி கொஞ்சம் காசு பணத்தை பெற்று புதிய பாத்திரங்களை வாங்கி வீடியோவை மீண்டும் போட தொடங்கினாங்க.

அதிலும் சில சிக்கல்கள். வீடியோவில் எதிர்பார்த்த அளவிற்கு வியூஸ் இல்லை. நாம் செய்யும் தொழிலில் ஏதாவது ஒரு புதுமை இருந்தால்தானே, நம்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்ன செய்வது, என்று சிந்தித்து, 7 நாட்களுக்கு 7 குழப்பு, 7 நாட்களுக்கு 7 சட்னி, ஏழு நாட்களுக்கு என்ன சமையல், என்ற புதுவிதமான ஒரு யுக்தியை அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதுதான் இவங்களுக்கு சக்சஸும் கொடுத்திருக்கு.

ஆனால் அதிலும் சில சிரமங்கள். இவர்கள் படித்ததோ BA ஹிஸ்டரி. கம்ப்யூட்டரை பற்றியோ, வீடியோ எடிட்டிங்கை பற்றியோ இவர்களுக்கு எதுவும் தெரியாது. வாரத்தில் ஒரு வீடியோ போடுவதே மிகவும் சிரமம் என்ற சூழ்நிலை. என்ன செய்வது? தன்னுடைய 44 ஆவது வயதில் வீடியோ எடுப்பது எப்படி, வீடியோவை எடிட் செய்வது எப்படி, அந்த வீடியோவை யூடியூபில் அப்லோட் செய்வது எப்படி, என்ற எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். இவர்களுடைய ஆர்வம் ஒரு வருடத்திற்குள் இவர்களை மெருகேற்றி உள்ளது.

தன்னுடைய 47 ஆவது வயதில் இவர்களுடைய கனவு நனவானது. தன்னுடைய கணவர் ஐடி கம்பெனியில் சம்பாதிப்பதற்கு நிகராக, இன்று ஹேமாவும் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். எத்தனை வயதானால் என்ன? கற்றுக் கொள்வதற்கும் சம்பாதிப்பதற்கும் வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு ஹேமா அவர்களின் வாழ்க்கையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

- Advertisement -