விநாயகப் பெருமானுக்கே உரித்தான மிகவும் முக்கியமான ஒரு நாளாக தான் இன்றைய தினம் திகழ்கிறது. இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. இன்றைய தினம் எப்படிப்பட்ட வழிபாடுகளை செய்தவராக இருந்தாலும், வழிபாடே செய்யாதவராக இருந்தாலும் இந்த ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகள் வீடு திரும்பும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சினை தீர வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்களை தீர்க்கக் கூடிய நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி திகழ்கிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கவல்ல சதுர்த்தியாக கூறப்படுகிறது. அதிலும் இன்று வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி. இந்த நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவதால் இந்த நாளில் பலவிதமான அற்புதங்கள் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட அற்புதமான இந்த நாளில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கணபதியை பற்றியும் அந்த கணபதிக்குரிய மந்திரத்தை பற்றியும் தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
விநாயகப் பெருமானின் முப்பத்தி இரண்டு வடிவங்களில் ஒன்றாக திகழ்பவர் தான் ஹேரம்ப கணபதி. இவர் ஐந்து தலைகளையும், பத்து கைகளையும் கொண்டவர். “ஹேரம்ப” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “உதவியற்றவர்களைக் காப்பவர்” என்று பொருள். ஹேரம்ப கணபதி, குறிப்பாக தாந்த்ரீக வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவர். விநாயகரின் ஐந்து முகங்கள் ஐந்து திசைகளைக் குறிக்கின்றன, அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிக்கின்றன. பத்து கைகள் பத்து வகையான ஆயுதங்களையும், ஆசீர்வாதங்களையும் தாங்கியுள்ளன. ஹேரம்ப கணபதி சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பார், இது அவரது ஆளுமையையும், வீரத்தையும் குறிக்கிறது.
ஹேரம்ப கணபதியை வழிபடுவதால்
சகல தோஷங்களும் நீங்கும். தொழில் தடைகள், மனக்குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும். துன்பங்கள் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எனவே, இந்த வடிவத்தை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஹேரம்ப கணபதியை நாம் முழுமனதோடு நினைத்து இன்று இரவு 12 மணிக்குள் இந்ல மந்திரத்தை 15 நிமிடம் மட்டும் கூறினால் போதும். நம் வாழ்வில் இதுவரை பட்ட அனைத்து விதமான கடன்களையும் சரி செய்வதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையும் வாழ முடியும்.
இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை இன்று இரவு 12 மணிக்குள் கூற இயலவில்லை என்பவர்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டும் கூறலாம். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடைகளும் கட்டுப்பாடுகளும் கிடையாது. இருப்பினும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை கூறும் பொழுது இந்த மந்திரத்திற்கு உரிய சக்தியால் அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் க்லீம் ஹேரம்ப கணபதியே ஸ்வாகா “
இதையும் படிக்கலாமே: வியாபாரம் செழிக்க தாந்திரீகம்
அதித சக்தி வாய்ந்த இந்த ஹேரம்ப கணபதியை இன்றைய சிறப்பு மிகுந்த நாளில் நாம் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய நம்முடைய கடன் பிரச்சினை அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.