நிறைய பேருக்கு வீட்டிலேயே ஹெர்பல் ஆயில் எப்படி தயார் செய்வது என்பது தெரியாது. கடையில் அதிக காசு கொடுத்து தான் வாங்குவார்கள். அப்படி வாங்கக்கூடிய எண்ணெய் எந்த அளவுக்கு இயற்கையானது என்பதும் நமக்கு தெரியாது. எல்லோருடைய தலை முடிக்கும் செட் ஆகும்படி ஒரு ஹெர்பல் ஆயிலை நம்முடைய வீட்டிலேயே சுலபமான முறையில், பக்குவம் தவறாமல் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப் போகின்றோம். இந்த அழகு குறிப்பு எல்லோருக்கும் அழகான முடியை கொடுக்கும்.
சுலபமான முறையில் ஹெர்பல் ஆயில் தயார் செய்யும் முறை:
முதலில் பின் சொல்லக் கூடிய பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு, வெள்ளை கரிசலாங்கண்ணி, பூ, இலை, காம்பு சேர்ந்து – 1 கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ – 10, கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, வேப்ப இலை – 1 ஒரு கைப்பிடி அளவு, செம்பருத்தி இலை – 10, கருஞ்சீரகம் – 1/2 கைப்பிடி அளவு, வெந்தயம் – 1 கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காய் கொட்டையை நீக்கி – 4, வெட்டிவேர் – 1 கைப்பிடி அளவு.
மேலே சொன்ன பொருட்களில் எந்த பொருட்களை எல்லாம் கழுவ முடியுமோ, கழுவி வெயிலில் லேசாக ஈரம் இல்லாமல் காய வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளில் எல்லாம் பூச்சி மருந்து அடித்திருந்தால் பிரச்சனை. ஆகவே அதை முதலில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். தயாராக எடுத்து வைத்திருக்கும் இந்த பொருளை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முடிந்த வரை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்தால் எடுத்தால் கையில் உருண்டை பிடிக்கும் அளவுக்கு நமக்கு ஈரப்பதத்தோடு தான் கிடைக்கும். அதை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி மசால் வடை போல தட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்து வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்.
ஈரம் மொத்தம் போனதும் இதை அப்படியே தேங்காய் எண்ணெயில் போட்டு, தேங்காய் எண்ணெயை இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து தலையில் தடவினாலும் சூப்பரான ஹெர்பல் ஆயில் தயார். அப்படி இல்லையா இதை எண்ணெயில் போட்டு சூடு படுத்தியும் தயார் செய்யலாம்.
ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 லிட்டர் அளவு மர செக்கு தேங்காய் எண்ணெய், 1 குழி கரண்டி அளவு விளக்கு எண்ணெய் ஊற்றி, அது லேசாக காய்ந்து வரும் போது, நாம் மசால் வடை போல காய வைத்து இருக்கும் மூலிகை பொருட்களை எண்ணெயில் போடவும். ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேரையும் அந்த எண்ணெயில் போட்டு நன்றாக சூடு செய்தால், சடசிடப்பு எல்லாம் அடங்கும், எண்ணெய் காய காய. அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த ஹேர் பேக்கை போட்டால் முடி உதிர்வதை 30 நாட்களில் நிறுத்தி விடலாம். கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொத்தமல்லி.
எண்ணெய் பச்சை நிறத்திற்கு வந்துவிடும். தட்டு போட்டு மூடாமல் எண்ணெய் ஆற விடுங்கள். பிறகு இதை வடிகட்ட வேண்டாம். அப்படியே ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் தலைக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி வர முடி வளர்ச்சி மூன்று மடங்கு நிச்சயம் அதிகரிக்கும். இந்த எண்ணெயை உங்கள் சௌகரியம் போல பயன்படுத்தலாம். தினமும் தேங்காய் எண்ணெய் போல தலைக்க வைக்கலாம். வாரத்தில் இரண்டு முறை நன்றாக இந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டும் குளிக்கலாம். அது உங்களுடைய சௌகரியம்தான். அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.