இந்த ஹேர் பேக்கை போட்டால் முடி உதிர்வதை 30 நாட்களில் நிறுத்தி விடலாம். கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொத்தமல்லி.

hair8
- Advertisement -

சில பேருக்கு தலையில் கைவை வைத்தாலே கையோடு முடி உதிர்ந்து வந்துவிடும். இன்னும் கொஞ்ச நாள் இப்படியே விட்டால் தலையில் வழுக்கை விழுந்து விடும். கட்டுப்படுத்த முடியாத முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஹேர் பேக் ரெமிடியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த ஹேர் பேக் போட தொடங்கிய ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம். மிக மிக சுலபமாக சமையல் அறையில் இருக்கக்கூடிய மூன்று பொருட்களை வைத்து செலவில்லாமல் இந்த ஹேர் பேக்கை தயார் செய்துவிடலாம். போஷாக்கு இல்லாமல், கொட்டக்கூடிய மெலிந்த முடியை வைத்திருக்கக் கூடியவர்களுக்காக சூப்பர் அழகு குறிப்பு.

முடிவு உதிர்வை 30 நாட்களில் கட்டுப்படுத்த ஹேர் பேக்:
முந்தைய நாள் இரவே ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், போட்டு நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை இந்த இரண்டு பொருட்களும் நன்றாக தண்ணீரில் ஊறி வந்து, நமக்கு கிடைத்து விடும்

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறிய தண்ணீரோடு வெந்தயத்தையும் அரிசியையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு நாம் சேர்க்க வேண்டிய பொருள் கொத்தமல்லி தழை. கழுவிய ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையையும் இதோடு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி தழைக்கு முடி உதிர்வை நிறுத்தக்கூடிய சக்தி உண்டு.

ஒரு காட்டன் துணியை வைத்து இந்த பேக்கை வடிகட்டி எடுத்தால் சூப்பரான நைசான மொழு மொழு ஹேர் பேக் நமக்கு கிடைத்திருக்கும். காரணம் இதில் நாம் வெந்தயத்தை சேர்த்து அரைத்து இருக்கின்றோம். இந்த ஹேர் பேக்குடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், உங்கள் வீட்டில் தலைமுடி வளர்ச்சிக்கு எந்த எண்ணெய் இருக்கிறதோ அதை இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டியதுதான்.

- Advertisement -

முதலில் தலையில் இருக்கும் சிக்கை நீக்கிவிடுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை ஸ்கால்ப்பில் படும்படி போடுங்கள். பிறகு முடியின் நுனி வரை போட்டு கொண்டைக்கட்டி, தலைக்கு மேலே ஒரு கவர் போட்டுக்கோங்க. அப்பதான் ஈரத்தன்மை தலைமுடியில் அப்படியே இருக்கும். முடி வறண்டு போகாது. உங்களுக்கு ரொம்பவும் குளிர்ச்சியான உடம்பு என்றால், 10 நிமிடத்தில் நீங்கள் தலையை அலசிக் கொள்ளலாம். இல்லை என்றால் 20 நிமிடம் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் இதை போட்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்தில் கூட உங்கள் முகம் கருக்காமல் தகதகவென்று பிரகாசமாக மின்ன தயிருடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து பேக் போட்டுங்கோங்க.

மாதம் 4 நாட்கள் இந்த பேக்கை ட்ரை பண்ணி பார்த்தாலே உங்களுடைய முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். இன்னொன்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாட்டுடன், எந்த அளவுக்கு தண்ணீர் குடித்து எந்த அளவுக்கு சத்து நிறைந்த சாப்பாட்டை சாப்பிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய முடியும் ஆரோக்கியமாக வளரும் என்ற இந்த குறிப்புடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -