மே.இ மற்றும் இங்கிலாந்து 2ஆவது போட்டி – மிரட்டல் சதமடித்த மே.இ வீரர். தனது காதலிக்காக தான் இப்படி விளையாடுகிறேன் – ஆட்டநாயகன் பேட்டி

Hetmyer

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (22-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Holder

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை துவங்கியது. சென்ற போட்டியில் சதமடித்த கெயில் இந்த போட்டியில் 50 ரன்களை குவித்தார். மேலும், அந்த அணியின் இளம் வீரரான ஹெட்மயர் சதமடித்து அசத்தியது மட்டுமின்றி போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ தீவுகள் அணி வெற்றிபெற்றது. 83 பந்தில் 104 ரன்கள் குவித்த ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும், பரிசளிப்பு விழாவில் பேசிய அவர் : இந்த பொடியன் ஆரம்பத்தில் நான் ஒன்று இரண்டு ரன்களாக மாற்றி அணியை நல்ல ரன்ரேட் வரும்வரை பொறுமையாக ஆடினேன். அதன்பிறகு எனது பாணியில் அதிரடியாக சிறப்பாக ஆடினேன்.

Hetmyer 1

இந்த சதம் எனக்கு சிறப்பான ஒன்றாகும். ஏனெனில், எனது காதலிக்காக நான் அடித்த சதம். அவள் என்னை சுற்றி இருக்கும்வரை நான் சிறப்பாக ஆடுவேன் என்று தெரிவித்தார். இந்த போட்டியை காண ஹெட்மயர் காதலி வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இவர்கள் சொன்னால் பாகிஸ்தான் போட்டி மட்டுமல்ல முழு உலகக்கோப்பை தொடரையே விளையாடாமல் தவிர்க்க இந்திய அணி தயாராக உள்ளது – ரவி சாஸ்திரி அதிரடி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்