இவர்கள் சொன்னால் பாகிஸ்தான் போட்டி மட்டுமல்ல முழு உலகக்கோப்பை தொடரையே விளையாடாமல் தவிர்க்க இந்திய அணி தயாராக உள்ளது – ரவி சாஸ்திரி அதிரடி

Ravi

இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா முழுவதும் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக எதிர்ப்பு அலைகள் எழுந்து வருகின்றன. மேலும், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடக்கூடாது என்றும் பலரும் கூறிவருகின்றனர்.

worldcup

ஹர்பஜன் மற்றும் கங்குலி ஆகியோர் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்றும், சச்சின் மற்றும் கவாஸ்கர் போட்டியில் விளையாடி அவர்களை வீழ்த்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில் ரவி சாஸ்திரி கூறியதாவது : இந்தியாவில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடலாமா ? வேண்டாமா ? என்று என்பது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் மத்திய அரசும் முடிவு எடுக்க வேண்டும்.

Ind-Pak

மேலும், இந்திய நாட்டின் நலத்திற்காக அவர்கள் சொன்னால் இந்திய அணி பாகிஸ்தான் போட்டி மட்டுமல்ல, உலகக்கோப்பை தொடரிலேயே பங்கேற்காமல் வெளியேறும் என்று நெகிழ்ச்சியோடு பேட்டி அளித்தார்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அரசின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், இது என் விருப்பம். பாகிஸ்தான் உடனான உலகக்கோப்பை போட்டி குறித்து – முதல் முறையாக வாய் திறந்த சச்சின்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்