வீட்டிலேயே, செம்பருத்தி பூவை வைத்து நம் தலை முடிக்கு தேவையான ஷாம்புவை தயார் செய்யலாமே. ஒரு சொட்டு கெமிக்கல் கூட சேர்க்காமல்.

natural-shampo
- Advertisement -

நம்முடைய தலைமுடியில் ஏகப்பட்ட பிரச்சனை. நிறைய முடி கொட்டுது. புதிய முடி வளர மாட்டேங்குது. முடி அடர்த்தியாக இல்லை. அரிப்பு பிரச்சனை, என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு நிறைய காரணங்களை நாம் சொல்லலாம். ஆனால் அதில் முதல் காரணமாக இருப்பது நாம் தலைக்கு பயன்படுத்தும் செயற்கையான பொருட்கள். தலைக்கு தேய்த்துக் குளிக்க சுலபமாக இருக்கிறது என்று செயற்கை பொருட்கள் அதிகம் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்துகின்றோம். ஷாம்பு போட்டால் தான் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு இல்லை என்றால் அது நமக்கு ஒரு மனநிறைவை கொடுக்கவே கொடுக்காது.

ஷாம்புவுக்கு நாம் அவ்வளவு அடிமையாகி விட்டோம். சரி என்னதான் விலை உயர்வான ஷாம்புவாக இருந்தாலும் அதில் ஒரு சில கெமிக்கல் கலக்கப்படும். ஏனென்றால், அப்போதுதான் அது கெட்டுப் போகாது. இப்படிப்பட்ட ஷாம்புவை வாங்கி நாம் பயன்படுத்துவதற்கு பதில் இயற்கையான முறையில் செம்பருத்தி பூவை வைத்து நம்முடைய வீட்டிலேயே சுலபமாக ஷாம்பு தயாரிக்கலாம்.

- Advertisement -

வீட்டிலேயே செம்பருத்தி பூ ஷாம்பு தயாரிக்கும் முறை:
இதற்கு நீங்கள் கொஞ்சம் வேலையை செய்து தான் ஆக வேண்டும். முடி வளர்ச்சி தேவை, கெமிக்கலால் உடம்புக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம். இந்த ஷாம்புவுக்கு நமக்கு தேவையான பொருட்கள் பூந்திக்கொட்டை 5, சீயக்காய் 5, வெந்தயம் 1 ஸ்பூன், செம்பருத்திப்பூ 5 லிருந்து 7.

இதில் பூந்திக்கொட்டையை இடித்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். மேலே இருக்கும் அந்த தோலை மட்டும் தான் குறிப்புக்கு பயன்படுத்தனும். பிறகு செம்பருத்தி பூ காம்பு மற்றும் மேலே இருக்கும் மகரந்தங்களை நீக்கி விடுங்கள். அந்த செம்பருத்தி பூ இதழ்கள் மட்டும் நமக்கு தேவை.

- Advertisement -

முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க. அதில் பூந்தி கொட்டையின்தோல், சீயக்காய், வெந்தயம், செம்பருத்தி பூ, இந்த நான்கு பொருட்களையும் போட்டு 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி ஒரு மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இது ஊறட்டும் மறுநாள் காலை எழுந்து இதை அப்படியே ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

மிதமான தீயில் கொதிக்கட்டும். 7 லிருந்து 8 நிமிடம் இந்த தண்ணீர் கொதிக்கும் போது நாம் இதில் சேர்த்து இருக்கும் பொருட்களின் சத்துக்கள் எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கி விடும். பிறகு இது ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றினால் சூப்பரான செம்பருத்தி பூ ஷாம்பு தயார். இது பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கருகருவென படர்ந்த கடல் அலைப் போல அலை பாயும் கருங்கூந்தலை பெற இந்த எண்ணெய் உங்களிடம் இருந்தாலே போதும். உங்கள் முடியின் அழகை பார்ப்பவர் யாராயினும் ஒரு கணமாவது அதிசயிக்காமல் இருக்கவே முடியாது.

மேலே சொன்ன அளவுகளில் ஷாம்புவை தயார் செய்தால் இரண்டு பேரிலிருந்து மூன்று பேர் தாராளமாக தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதை வெளியில் வைத்தால் இரண்டு நாட்கள் தான் நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்த முடியும். எந்த ஒரு கெமிக்கலும் சேர்க்காத இந்த ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்தாலும், தலையில் இருக்கும் எண்ணெய் அழுக்கு சுத்தமாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இதில் நாம் சேர்த்திருக்கும் செம்பருத்தி பூ உங்களுடைய முடியை சில்க்கியாக வைத்திருக்கும் ஊட்டச்சத்தோடு பாதுகாப்போடு வைத்திருக்கும். இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -