மேரி மாதாவை வணங்கிவிட்டு முருகனுக்கு காவடி தூக்கும் அதிசய கிராமம்

kavadi

‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்’  என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. ஆனால், இன்னும் ஊர்க்கோயில்களில், கிராமங்களில், அப்துல்காதருக்கு மட்டும் அல்ல அந்தோணிதாசுக்கும் கூட தொடர்பு உண்டு, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன சில திருவிழாக்கள். ஆம். கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் இன்றளவும் பெரும்பாலான திருவிழாக்கள், மதங்களைக் கடந்து ஒற்றுமையோடு நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு காவடித் திருவிழாவைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

kavadi

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை என்னும் ஊருக்கு அருகே உள்ளது ஓரிக்கோட்டை கிராமம். இங்கே இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களும், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த மக்களும் வசிக்கின்றனர்.

இங்கே நல்லாத்துரை முனீஸ்வரர் ஆலயம் என்று ஒரு ஆலயம் உள்ளது. இதன் அருகிலேயே மகாலிங்கமூர்த்தி, பரமகாளீஸ்வரி சமேத சிவாலயம் ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களுக்கும் திருவிழா ஒன்றாகத்தான் நடைபெறுகிறது.

kavadi

- Advertisement -

வருடந்தோரும் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் பூக்குழி இறங்குதல், காவடி எடுப்பு மற்றும் விளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.

இதையும் படிக்கலாமே:

உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள் – உண்மை சம்பவம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்பின்போது காவடிகள் அனைத்தும் தயார் செய்யப்படுகின்றன. பின்னர், அதே ஊரில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலமான புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வழிபட்ட பிறகுதான் காவடி எடுப்பு ஊர்வலம் தொடங்குகிறது. பல ஆண்டுகளான இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

kavadi

இங்கே வாழும் கிறிஸ்துவ மக்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் இத்திருவிழாவில் பெருமளவில் பங்கேற்கின்றனர். அதேபோல் புரட்டாசி மாதம் நடைபெறும் மாதா கோயில் திருவிழாவும் மதங்களைக் கடந்து வெகு சிறப்பாக நடைபெறுகிறது.