டெஸ்ட் போட்டியில் 8ஆவது வீரராக களமிறங்கி 229பந்துகளில் 202ரன்கள் அடித்து அதிரடி இரட்டைசதம் – மே.இ வீரர் சாதனை

holder
- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரேயான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ் டவுன் நகரில் கடந்த 23ஆம் தேத்துவங்கி நடைபெற்று வருகிறது.

wi

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 289ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியளித்தது . இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆட துவங்கியது வெஸ்ட் இண்டீஸ்.

- Advertisement -

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு 8 ஆவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் களமிறங்கினார். அவர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 229 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் மூலம் 202 ரன்களை அடித்து 8 ஆவது வீரராக களமிறங்கி இரட்டைசதம் அடித்தவர் என்ற அரிதான சாதனையை படைத்தார். அவருக்கு துணையாக ஆடிய டௌரிச் 116 ரன்களை குவித்தார்.

wi 1

இந்த ஜோடி 7 ஆவது விக்கெட்டுக்கு 295 ரன்களை குவித்தது. பின்னர் 628 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் இருப்பது போல உணர்கிறேன் – ஷிகார் தவான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -