நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் இருப்பது போல உணர்கிறேன் – ஷிகார் தவான்

dhawan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

mohammed-shami

முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகார் தவான். நாளை இரண்டாவது போட்டிக்கு முன் தற்போது தனது கருத்தினை தெரிவித்துள்ளார் தவான். கடந்த முதல் போட்டியில் 10 ரன்களை அடித்த போது ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை அடித்தார் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அளித்த பேட்டியில் : இந்திய அணியின் துவக்க வீரராக நான் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். கடந்த 115 ஒருநாள் போட்டிகளில் நான், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் டாப் 3 வீரர்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறோம். எங்களது பங்களிப்பு அணிக்கு ஆரோக்கியமாக உள்ளது என்பது எண்களின் பெருமையாகும்.

மேலும், தொடர்ந்து நாங்கள் இணைந்து விளையாடுவதால் நான், ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினராக இருப்பதுபோல உணர்கிறேன். எங்களது இந்த பிணைப்பே எங்களது ஆரோக்கியமான ஆட்டத்திற்கு காரணமாக நான் கருதுகிறேன் என்று தவான் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

காட்டுவாசிகள் நடனம். அவர்கள் முறைப்படி மூக்குடன் மூக்கை வைத்து வணக்கத்தை கூறிய தோனி, ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணி வீரர்கள் – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்