360 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்த மே.இ தீவுகள் அணி. எளிதாக சேசிங் செய்து வென்ற இங்கிலாந்து. காரணம் இதுதான் – ஹோல்டர் புலம்பல்

Holder
- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (20-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Chris

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி கெயில் 135 மற்றும் ஹோப் 65, பிராவோ 40 ரன்கள் என அனைவரும் அதிரடி காட்ட 50 ஓவர்கள் முடிவில் 360 ரன்களை குவித்தது இதனால் 361 ரன்கள் என்ற கடினமான இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க பட்டது.

- Advertisement -

அனால், இந்த இலக்கினை ஜேசன் ராய் 123(85 பந்துகள்) மற்றும் ரூட் (102) ஆகியோரது சதத்தால் 48 ஓவர்களிலேயே எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. பிறகு இந்த போட்டியின் தோல்வி குறித்து பத்திரிகைலர் சந்திப்பில் பேசிய மே.இ. தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் : எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பெரிய அடித்தளம் அமைத்து தந்தனர்.

Root

போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கவேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் நாங்கள் பந்துவீச்சில் கோட்டை விட்டோம். அதன் விளைவாக போட்டியில் தோல்வி அடைந்துளோம். இதனால், அடுத்த போட்டிக்கு இந்த தோல்வியினை பாடமாக வைத்து அடுத்த போட்டியில் மீண்டும் பலத்துடன் திருப்பி அடிப்போம் என்று கூறினார் ஹோல்டர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நான் எப்பவுமே பாஸ் தான். 39 வயதிலும் ஒருநாள் போட்டியில் 12 சிக்ஸர்களுடன் மிரட்டல் சதமடித்து சாதனை படைத்த – கிறிஸ் கெயில்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -