உங்கள் வீட்டிற்கு இந்த நிலையை வாசலாக அமைத்தால் என்ன நடக்கும்? உங்கள் ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் யார் அமர்ந்திருந்தால் உங்களுக்கு வீடு அமையும்?

4th-house-vasal

ஒரு வீட்டை கட்டி விட்டால் மட்டும் போதாது. அது எப்படி கட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு கட்ட வேண்டும். ஒரு வீட்டிற்கு நிலைவாசல் என்பது அந்த வீட்டின் மூச்சுக் காற்றாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட வாசலின் நிலையை வேறு ஒரு வீட்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கக் கூடாது. அப்படி இருக்க வேண்டுமெனில் அது நாம் ஏற்கனவே வசித்த வீட்டின் நிலையாக மட்டுமே இருக்க வேண்டும். அதில் விதிவிலக்காக தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ‘நிலை’ உள்ளது. தேக்கு மரம் என்பது மூன்று தலைமுறையினர் வாழ்ந்து முடிந்த பின்னரும் கரையான், பூச்சி போன்றவை அரிக்காமல் அப்படியே கம்பீரமாக நிற்கும்.

burma-teak-wood

அதனால் தேக்கு மரத்தை வாங்கலாம். அதிலும் குறிப்பாக பர்மா தேக்கு மரம் கொண்டு செய்யப்பட்ட நிலையாக இருந்தால் புதிய வீட்டிற்கு தாராளமாக வேறொருவர் பயன்படுத்தி இருந்தாலும் நீங்கள் மீண்டும் வாங்கி பயன்படுத்தலாம். அதை தவிர்த்து வேறொருவர் வீட்டின் நிலையை உங்களது புதிய வீட்டிற்கு எப்போதும் நீங்கள் பயன்படுத்தி விடக்கூடாது. இதனால் புதிய வீட்டில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. ஏன் நாம் வேறொருவரின் நிலை வாசலை பயன்படுத்தக்கூடாது? அப்படி பயன்படுத்துவதால் என்ன ஆகும்? நம் ஜாதகத்தில் நாலாம் இடத்தில் என்ன ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது? என்பதைப் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்முடைய சுக துக்கங்களை, நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் அதனை உள்வாங்கி இருக்கும். நாம் அமைத்திருக்கும் ஜன்னல், கதவுகள், சுவர் போன்ற ஒவ்வொன்றிற்கும் நம் வாழ்வில் பங்கு உண்டு. அதில் குறிப்பாக கதவின் நிலைக்கு நம்முடைய நல்ல வைப்ரேஷன்களும், தீய வைப்ரேஷன்களும் உள்வாங்கும் திறன் உண்டு. இது இயற்கையாகவே நடக்கும் ஒன்று. இதனால் வேறு ஒருவர் பயன்படுத்திய நிலையை நாம் பயன்படுத்துவதால் அவர்களிடமிருந்த தீய வைப்ரேஷன்கள் நமக்கும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதை தெரியாமல் வாங்கி விடுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு பண கஷ்டம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. இதற்கு பரிகாரமாக வீட்டை சுற்றி மரங்கள் வளர்க்கலாம். அமாவாசை தினங்களில் வீட்டிற்கும், குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் சேர்த்து திருஷ்டி கழித்து நடு வாசலில் ஊற்றலாம்.

thirusti

அதே போல் ஒரு மனையை வாங்கிய உடன் அதை நன்றாக உழுது விட்டு நவதானியத்தை விதைக்க வேண்டும். நவதானியங்கள் முளை விட்டதும் பசுமாட்டை கொண்டு அதை மேய விட வேண்டும். அதன்பின் நீங்கள் வீடு கட்டினால் அம்மனையானது காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்கிறது சாஸ்திரம். இது நம் பண்டைய முன்னோர்கள் கடைபிடித்த வாஸ்து சாஸ்திரங்களில் ஒன்று. இது போன்ற சில வாஸ்து சாஸ்திரங்கள் நம் தலைமுறையினருக்கு தெரியாமலே போய் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்.

- Advertisement -

ஒருவரது ஜாதக கட்டத்தில் நாலாம் இடம் என்பது வீடு வாங்கும் யோகத்தை கொடுப்பதாக அமைகிறது. நாலாம் இருப்பிடத்தில் என்ன கிரகங்கள் உங்களுக்கு அமைந்திருக்கின்றன என்பதை கவனியுங்கள். அதைப் பொறுத்தே உங்களது சொந்த வீடு என்கிற கனவை எந்த வயதில் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை கணித்து கூறலாம்.

jathagam astro

உங்கள் ஜாதக கட்டத்தில் நாலாம் இடத்தில் சூரிய பகவான் அமர்ந்திருந்தால் உங்கள் நடுத்தர வயதில் நீங்கள் வீடு கட்டும் யோகம் பெறலாம். அதுவே செவ்வாய் பகவான் இருந்தால் உங்களுக்கு பெரிய வீடு அமையும்.

புத பகவான் இருந்தால் அழகான வீடு அமையும் யோகம் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.

நாலாம் இடத்தில் குரு அமர்ந்திருந்தால் நடுத்தர வயதிற்கு மேல் வீடுபேறு கிடைக்கப்பெறும்.

home

சுக்கிரன் அமர்ந்திருந்தால் உங்களது இளமை காலத்திலேயே நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

சனி பகவான் அமர்ந்திருந்தால் உங்களுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் உங்களால் வீடு என்ற பாக்கியத்தை அனுபவிக்க முடியும்.

அதுவே நாலாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அடிக்கடி இடமாற்றங்கள் நிகழ்ந்து அதன்பின் உங்களுக்கு வீடுபேறு அமையும்.

இதையும் படிக்கலாமே
எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசையில் நிலைவாசல் அமைந்திருந்தால் சுகபோக வாழ்வு கிட்டியிருக்கும்? வேறு திசையில் நிலைவாசல் இருந்தால் அதை எப்படி அதிர்ஷ்டமாக மாற்றுவது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have When will i buy a home astrology. Home astrology in Tamil. House astrology in Tamil. Astrology home prediction. Astrology tips for own house.