எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசையில் நிலைவாசல் அமைந்திருந்தால் சுகபோக வாழ்வு கிட்டியிருக்கும்? வேறு திசையில் நிலைவாசல் இருந்தால் அதை எப்படி அதிர்ஷ்டமாக மாற்றுவது?

astro-maindoor

ஒரு மனிதனுக்கு ஜாதகம் எப்படி முக்கியமோ அதே போல் தான் ஒரு வீட்டிற்கும் மனையடி சாஸ்திரம் என்பது முக்கியம். ஒரு வீடு என்பது மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையாக இருக்க வேண்டும். நாம், நமக்குப் பிறகு நம் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என்று வம்சாவழியாக ஒரு இல்லம் அமைந்து விட்டால் அதுவே நல்ல இல்லமாக பல காலம் வரை நீடித்து நிற்கும். நீங்கள் வாங்கும் மனை, மனையடி சாஸ்திரத்தின்படி அமைந்திருப்பது முக்கியம். வீடு என்பது சாதாரண விஷயம் அல்ல. நாம் வாழும் மண்ணில், நாம் எழுப்புகின்ற வீடானது நம் வாழ்க்கையில் உயிரோட்டம் போன்றது. அத்தகைய வீடானது உங்கள் நட்சத்திரத்திற்கு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், வேறு முறையில் அமைந்திருந்தால் அதை எப்படி திருத்தம் செய்வது என்பது பற்றியும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

black-soil-land

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு திசை இருப்பது போல், நவக்கிரகங்களுக்கும் திசை இருக்கிறது. அதே போல் தான் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கூட ஒவ்வொரு திசை ராசியானதாக இருக்கும். அவ்வகையில் உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த திசையை நோக்கியவாறு நிலைவாசல் கதவு அமைந்தால் உங்களுக்கு யோகமான வாழ்வு அமையும். வம்சா வழியாக உங்கள் சந்ததியினர் அந்த வீட்டில் அமைதியாக வாழும் பாக்கியம் கிட்டும்? என்பதை பார்ப்போம்.

கிழக்கு திசை:
அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி இந்த நான்கு நட்சத்திரத்திற்கும் கிழக்கு திசை உரிய திசை. கிழக்கு திசையில் தான் முதன் முதலாக தெய்வங்கள் பூமிக்கு வந்து பின்னர் அப்படியே மேற்கு திசை வழியாக சென்றனராம். இதை இந்திர திசை என்றும் கூறுவார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த நான்கு நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

தென்கிழக்கு:
பரணி, கேட்டை, மகம், உத்திரட்டாதி இந்த நான்கு நட்சத்திரத்திற்கும் தென்கிழக்கு திசை உரிய திசையாக இருக்கும். தென்கிழக்கை அக்னி மூலை என்பார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த நான்கு நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

- Advertisement -

தெற்கு:
கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த நான்கு நட்சத்திரத்திற்கும் தெற்கு திசை உரிய திசையாக இருக்கும். இந்த திசை எமனுக்கு உரிய திசையாக கூறுவார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த நான்கு நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

vasal-kathavu

தென்மேற்கு:
மிருகசீரிஷம், அஸ்தம், உத்திராடம் இந்த நான்கு நட்சத்திரத்திற்கும் தென்மேற்கு திசை உரிய திசையாக இருக்கும். இந்த திசை கன்னி மூலைக்கு உரிய திசையாக கூறுவார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த நான்கு நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

வடமேற்கு:
திருவாதிரை, சித்திரை, திருவோணம் இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் வடமேற்கு திசை உரிய திசையாக இருக்கும். இந்த திசை வாயு மூலைக்கு உரிய திசையாக கூறுவார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

vasthu

வடக்கு:
புனர்பூசம், சுவாதி, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் வடக்கு திசை உரிய திசையாக இருக்கும். இந்த திசை குபேரனுக்கு உரிய திசையாக கூறுவார்கள். இந்த திசையை நோக்கியவாறு இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

வடகிழக்கு:
பூசம், விசாகம், சதயம் இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் வடகிழக்கு திசை உரிய திசையாக இருக்கும். இந்த திசை ஈசானிய மூலைக்கு உரிய திசையாக கூறுவார்கள். மேலும் பிரம்ம தேவர் இந்த திசையில் தான் நின்று உயிர்களை படைத்தாராம். இந்த திசையை நோக்கியவாறு இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

Vasthu tips in Tamil

மேற்கு:
ரோகிணி, உத்திரம், பூராடம். வர்ண பகவானுக்கு உரிய இந்த திசையில் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் நிலைவாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வில் யோகம் பெறுவீர்கள்.

உங்களின் நட்சத்திரத்தின் படி உங்களது வீடு அமையாமல் இருந்தால் அதற்கு பரிகாரமாக உங்கள் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்க்கலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய திசையில் வாழை மரம், தென்னை மரம் போன்ற மரங்களை வளர்த்து யோகம் பெறலாம். இது மிகவும் சுலபமான பரிகாரம் தான். வீட்டு மனை உங்களின் ஜாதகப்படி அமைந்திருந்தாலும் நிலைவாசல் கதவை உங்கள் நட்சத்திரம் வசிக்கும் இந்த திசைகளில் நீங்கள் அமைத்தால் நிச்சயம் அதிர்ஷ்ட யோகம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீடு முச்சந்தியில் இருக்கிறதா? தோஷம் தாக்காமல் இருக்க என்ன செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Main door entrance as per nakshatra. Nilai vasal vastu. Main door as per vastu shastra. Main door facing vastu shastra. Thalaivasal vastu in Tamil.