5 நிமிடத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல், உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற குப்பையில் தூக்கி போடும் இந்த 2 பொருள் போதும்.

hair24
- Advertisement -

வெளியில் கிளம்புவதற்கு அழகாக தயாராகி விட்டீர்கள். ஆனால் தலையில் நரைமுடி எட்டிப் பார்க்கிறது. நிறைய பேருக்கு இளமை தோற்றத்தை குறைவாக காட்டக்கூடிய இந்த நரைமுடி வெளியில் தெரிந்தால் சுத்தமாக பிடிக்காது. உடனடியாக அந்த நரை முடியை கருப்பாக மாற்ற என்ன ஹேர் டை பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாத, உங்கள் வீட்டிலேயே இந்த ஹேர் டை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் போட்டு கலந்து அப்படியே தலை முடியில் தேய்த்தால் 5 நிமிடத்தில் நரைமுடி கருப்பாக மாறிவிடும். வாங்க அந்த சுலபமான குறிப்பை நாமும் தெரிந்துகொள்வோம்.

முதலில் இந்த குறிப்புக்கு எலுமிச்சை பழ தோல் – 6, வாழைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சிவப்புநிற தோல் – 10 தேவை. எலுமிச்சம்பழத்தை சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, அதனுடைய தோல் மட்டும் இருக்கும் அல்லவா. அதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத் தோலையும், வாழைப்பூ தொலையும் தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு எலுமிச்சை பழத் தோலையும், எடுத்து வைத்திருக்கும் வாழைப்பூ தோல்களையும் சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் நைசாக அரைக்க முடியாது. மிக்சி ஜாரில் எவ்வளவு அரைபடுமோ அந்த அளவுக்கு அரைத்து விட்டு, இந்த விழுதை வடிகட்டி எடுத்தால் நமக்கு சாறு கிடைக்கும். இந்த சாறு அப்படியே இருக்கட்டும். (இந்த சாறை 2 பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

அடுத்தபடியாக இரண்டு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை தண்ணீரில் கழுவி விட்டு, அந்த இலைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு, நாம் எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை பழ வாழைப்பூ சாறிலிருந்து 1 பாகம் தண்ணீரை எடுத்து இந்த மருதாணியில் ஊற்றி மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த மருதாணியையும் வடிகட்டி சாறு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இருப்பு கடாயில் நாம் முதலில் சாறு எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை பழத்தோல், வாழைப்பூ தோல் சாறை ஊற்றி விடுங்கள். அதன் பின்பு மருதாணி இலையில் இருந்து எடுத்த சாறையும் ஊற்றி விடுங்கள். இந்த கலவையை அப்படியே அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைத்து 20 கலந்து விட்டுக் கொண்டே இருந்தால் நமக்கு ஒரு விழுது கிடைத்துவிடும். நாம் ஊற்றிய தண்ணீர் கொதித்துக் கொதித்து சுண்டி திக் பேஸ்டாக வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்தப் விழுதை ஒரு தட்டில் போட்டு வெய்யிலில் வைத்தால் நன்றாக காய்ந்து விடும். அதன் பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்தால் நமக்கு தேவையான ஹேர் டை பவுடர் தயார். இந்த ஹேர்டை பவுடரை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது. கடாயில் நிறைய இந்த கருப்பு நிறம் ஒட்டியிருக்கும். அதை வீணாக்காதீர்கள். ஒரு பிரஷ்ஷில் தொட்டு தொட்டு அதையும் தலையில் தேவைப்படும்போது அப்ளை செய்து கொள்ளலாம்.

தயார் செய்து கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் பொடியை மிகச்சிறிய அளவு எடுத்து ஒரு பவுலில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்தால் இன்ஸ்டன்ட் ஹேர் டை பேஸ்ட் தயார். பல் தேய்க்கும் பிரஷில் இந்த ஹேர் டையை தொட்டு வெள்ளை முடி இருக்கும் இடத்தில் தடவுங்கள். வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும். 5 நிமிடத்தில் தலையில் போட்ட டை காய்ந்துவிடும். தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடியை சீவிக் கொண்டு வெளியே கிளம்பி விடலாம்.

நீங்கள் போட்ட டை உங்கள் கையில் 5 நிமிடம் கழித்து ஒட்டாது. தலையில் நன்றாக பிடித்துக்கொள்ளும் வெள்ளை முடி கருப்பாக மாறி இருக்கும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஹேர்டை பவுடரை யூஸ் பண்ணிக்கோங்க. பக்க விளைவுகள் நிச்சயம் வராது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -