ஒருமுறை இந்த லிக்விடை ஊற்றி வீடு துடைத்தால், அடுத்தமுறை வீடு துடைக்கும் வரை, உங்கள் வீடு 24 மணி நேரமும் வாசமாக, ஈ, எரும்பு தொல்லை இல்லாமல், கிருமி நாசினியாகவும் இருக்கும்.

mib
- Advertisement -

நம்முடைய வீட்டில் தரை சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. குறிப்பாக குழந்தைகள் ஓடி ஆடி விளையாட கூடிய தரை சுத்தமாக இருக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது. சாப்பிடும் பொருட்களை தரையில் போட்டு மீண்டும், அதை எடுத்து குழந்தைகள் சாப்பிடும். அப்போது நம்முடைய தரை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் நாம் வீடு துடைப்பதற்கு கடையில் இருந்து வாங்கக்கூடிய ஏதாவது ஒரு லிக்விடை தான் பயன்படுத்துகின்றோம். அதை தவறு என்று சொல்லவில்லை. இருப்பினும் கிருமிநாசினியாக செயல்பட்டு நம் வீட்டு தரை எப்போதும் சுத்தமாக பளபளப்பாக இருக்க, உங்களுடைய கையாலேயே இந்த லிக்விடை நீங்களே தயார் செய்து, உங்களுடைய வீட்டை துடைத்துப் பாருங்கள். எப்போதும் நீங்கள் லிக்விட் ஊற்றி தரையை துடைப்பதற்கும், இந்த லிக்விட் ஊற்றி தரையை துடைப்பதற்கும் நிறையவே வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை நன்றாக சூடு செய்யுங்கள். தண்ணீர் கொதித்து வரும்போது, அந்த தண்ணீரில் பேக்கிங் சோடா – 1 ஸ்பூன், கற்பூரம்(சூடம்) – 5 இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். கற்பூரம் கரைவதற்கு 6 இருந்து 8 நிமிடங்கள் எடுக்கும். அதுவரை ஒரு கரண்டியை வைத்து இதை லேசாக அப்பப்போ கலந்து விட்டு கொண்டே இருங்க.

கற்பூரம் நன்றாக கரைந்ததும் 2 டேபிள்ஸ்பூன் விபூதியை இதோடு போட்டு நன்றாக கலந்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி நன்றாக ஆறவைத்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நம்முடைய ஹோம் மேட் வீடு துடைக்கும் லிக்விட் தயார். (2 மாதத்திற்கு இது கெட்டுப் போகாது. அப்படியே வைத்து பயன்படுத்தலாம்.)

- Advertisement -

பூஜைக்கு பயன்படுத்தாத புதியதாக வாங்கிய விபூதி இருக்கும் அல்லவா அந்த விபூதியை இந்த குறிப்பிற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைய பேருக்கு இப்படி ஒரு குழப்பம் இருக்கும். விபூதியை போட்டு வீடு துடைக்கலாமா என்று. சாணத்தில் இருந்து எடுக்கப்படுவது தான் விபூதி. சாணத்தை கரைத்து வீட்டு வாசலில் தெளித்து அதை காலில் மிதித்து தானே உள்ளே வருகின்றோம். அதுபோல இந்த விபூதியை வீடு துடைக்கும் தண்ணீரில் கலப்பதால் எந்த ஒரு தவறும் கிடையாது.

இந்த லிக்விடை வீடு துடைக்க எப்படி பயன்படுத்துவது? எப்போதும் போல உங்களுடைய பக்கெட்டில் 1/2 பக்கெட் அளவு சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் 2 மூடி நாம் தயார் செய்த இந்த லிக்விடை ஊற்றி கலந்து, மாப் போட்டு எப்போதும் போல உங்களுடைய வீட்டை துடைத்துக் கொள்ளலாம். குறிப்பாக எறும்புகள் ஊறும் மூலை முடுக்குகளில் இந்த தண்ணீர் நன்றாக படும்படி துடைத்து விட்டீர்கள் என்றால், எரும்புகள் வராது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் தெரியும். இந்த வாசம் உங்களுடைய வீட்டை எப்போதும் கோவில் போல வைத்திருக்கும்.

- Advertisement -