இது வெய்யில் காலம் தான். ஆனால் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அப்படி மழை பெய்து விட்ட பிறகு, ஒரு சில நாட்களில் வரக்கூடிய கொசுக்கள் மிக மிக ஆபத்தானவை. இவைகள் வீட்டிற்குள் வந்தால் நிச்சயமாக நோய்களை பரப்பாமல் செல்லாது. குளிர்காலத்தில் வரக்கூடிய காய்ச்சலை விட, இந்த வெயில் காலத்தில் வரக்கூடிய காய்ச்சலுக்கு பவர் அதிகம். சீக்கிரமாக அந்த காய்ச்சல் குணமடையாது. இந்த கொசு பிரச்சனையிலிருந்து தப்பித்து குழந்தைகளை பாதுகாக்க இயற்கையான முறையில் ஒரு கொசு விரட்டி எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பொதுவாகவே கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த கொசுவத்தி சில பேருக்கு அலர்ஜியை கொடுக்கும். இயற்கையான முறையில் பக்க விளைவுகளை உண்டாக்காத, கொசு விரட்டி உங்களுக்கு தேவை என்றால், இந்த குறிப்பை படித்து பயன் பெறுங்கள்.
இயற்கையான முறையில் கொசு விரட்டி வீட்டில் தயாரிப்பது எப்படி:
இந்த கொசு விரட்டியை தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். வேப்ப இலை, பூண்டு. அதன் பிறகு ஒரு மருந்து பாட்டில், சின்னதாக காலியான மருந்து பாட்டில் எடுத்துக்கோங்க. உள்ளே சுத்தமாக கழுவி வெயிலில் காய வைத்து விடுங்கள். பிளாஸ்டிக் மருந்து பாட்டில் ஆக இருந்தாலும் பரவாயில்லை. மேலே மூடி மட்டும் அலுமினியத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். விளக்கை ஏற்றி வைக்க ஒரு திரி. கடுகு எண்ணெய் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. கடுகு எண்ணெய் வாங்க முடியாதவர்கள் தேங்காய் எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நான்கு கொத்து வேப்ப இலைகள், தோல் உடன் 4 பூண்டு பல்லை போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை மைய அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை அப்படியே எடுத்து வைத்திருக்கும் மருந்து பாட்டிலுக்கு உள்ளே போட்டு, நிரப்ப வேண்டும். முக்கால் பாகம் நிரம்பினால் கூட போதும். இந்த விழுதோடு நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் அதை அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
இதற்குள் அலுமினிய மூடியில் ஒரு சின்ன ஓட்டையை போட்டு, அதில் கொஞ்சம் தடிமனாக விளக்கேற்றும் திரியை போட்டு வைத்து தயார் செய்து கொள்ளவும். திரியின் மேல் நுனியை அந்த எண்ணெயில் லேசாக நினைத்துக் கொள்ளுங்கள். திரியையும் எண்ணெயில் நினைத்துக் கொள்ளுங்கள். பாட்டிலை மூடி ரெடி பண்ணிடுங்க.
இப்போது பாட்டிலில் மூடியில் போட்ட திரியை, விளக்கு ஏற்றி வைத்து விட்டால், நெருப்பு வரும், அதோடு சேர்ந்து புகையும் வரும். இந்த பாட்டிலை வரவேற்பு அறையில் மாலை ஆறு மணி அளவில் வைத்து விட்டீர்கள் என்றால், வீட்டிற்குள் நிச்சயம் கொசு வராது. வீட்டிற்குள் கொசு வந்தால் கூட இந்த வாசத்திற்கு உடனடியாக மயங்கி செத்துப் போய்விடும்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அவர்களுடைய கைக்கு எட்டாமல் வையுங்கள். படுக்கையறையில் வைக்கும் போது துணிமணிகள் மெத்தைகள் இவைகளில் நெருப்பு பிடிக்காமல் பார்த்து ஜாக்கிரதையாக இந்த குறிப்பை முயற்சி செய்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். இப்படி ஏற்றி வைக்கக் கூடிய விளக்கு நிச்சயம் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை நீடிக்கும் மாலை நேரத்தில் மட்டும்தான் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஏற்றப் போகின்றோம். சரிங்க, பாதுகாப்பாக இருக்க கெமிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இதுவும் ஒரு சுலபமான வழிதானே.