உங்கள் வீடு எப்பொழுதும் நல்ல நறுமணத்துடன் இருக்க இந்த ஐந்து டிப்ஸ்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்

room
- Advertisement -

வீடு எப்பொழுதும் அழகாகவும் நல்ல வாசனையுடன் இருந்தால் நமது உள்ளமும், உடலும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஆண்கள் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பலவிதமான பிரச்சனைகளை பார்த்துவிட்டு மாலை வீட்டிற்குத் திரும்புவார்கள். அப்போது வீடு அழகாகவும் நல்ல நறுமணத்துடனும் இருந்தது என்றால் அவர்களின் மனநிலையும் உற்சாகமாகி நல்ல சிந்தனையுடன் இருப்பார்கள். இவ்வாறு வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒருவரின் மனது உற்சாகத்துடன் இருப்பதற்கும், வீடு எப்பொழுதும் நல்ல நறுமணத்துடன் இருப்பதற்கும் இந்த ஐந்து டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். வாங்க அந்த டிப்ஸ்கள் என்ன என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

head-ache

டிப்ஸ்: 1
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, இரண்டு மூடி துணி துவைக்கப் பயன் படுத்தும் கம்ஃபட், நன்றாகத் தூள் செய்யப்பட்ட 6 கற்பூரம், மற்றும் 2 ஸ்பூன் கிளியர் க்ளூ இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான வாசனையில் இருக்கும் கம்ஃபட்டை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் டீ கப்பில் ஊற்றி விட்டு இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பின்னர் டீ கப்பின் அடிப்பகுதியை லேசாகத் தட்டினலே போதும். இந்த வாசனை பொருள் அழகாக வந்து விடும். இதனை ஏற்கனவே பயன்படுத்திய பழைய ஓடனில் டப்பாவில் போட்டு வைத்து வீட்டில் எங்கு தேவையோ அந்த இடத்தில் மாட்டி வைத்தால் போதும். குறைந்தது 15 நாட்களுக்கு மேல் இந்தப் பொருள் வீட்டிற்கு நல்ல வாசனையை கொடுக்கும்.

- Advertisement -

டிப்ஸ்: 2
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பன்னீர், நான்கு சிட்டிகை ஜவ்வாது, நல்ல பிளேவரில் இருக்கும் வாசனை திரவியம் 2 ஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு தினமும் ஒருமுறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து பாருங்கள். வீடு எப்பொழுதும் நறுமணம் நிறைந்ததாக இருக்கும்.

javadhu powder

டிப்ஸ்: 3
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, கம்ஃபட் 2 ஸ்பூன் இவை இரண்டையும் நன்றாக பசை போன்று கலந்துவிட்டு, ஒரு வலை போன்ற துணி வைத்து இதன் மீது மூடி ஒரு ரப்பர் பேன்டை போட்டுவிட்டு, இதனை வீட்டின் அலமாரி, ஷோகேஸ் போன்ற இடங்களில் வைத்து விடுங்கள். அந்த இடம் முழுவதும் மிகவும் வாசனையாக இருக்கும்.

- Advertisement -

டிப்ஸ்: 4
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, இரண்டு ஸ்பூன் வாசனை திரவியம் நன்றாகப் பொடித்த மூன்று கற்பூரம் இவை மூன்றையும் ஒன்றாக பசை போன்று கலந்து கொண்டு, அதன் மீது ஒரு வலைத் துணியை வைத்து ரப்பர் பேண்ட் போட்டு மூடிக் கொள்ள வேண்டும். இதனை உங்கள் வீட்டில் ஹாலில் சோபாவின் பக்கத்தில் அல்லது பெட்ரூமில் வைத்துக்கொள்ளலாம். மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

spray

டிப்ஸ்: 5
சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை திரவிய பாட்டில்கள் காலியாக இருந்தால் அதனுள் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, இரண்டு சிட்டிகை ஜவ்வாது, ஒரு ஸ்பூன் வாசனை திரவியம் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக குளிக்கி விட்டு, ஒரு வலைத் துணியை கட்டி ரப்பர் பேண்ட் போட்டு மூடி விட்டு துணி வைக்கும் அலமாரியில் வைத்து விடுங்கள் போதும். உங்கள் அலமாரி எப்பொழுதும் வாசனை நிரம்பியதாக இருக்கும்.

- Advertisement -