இதை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாங்க. நீங்களும் சினிமா ஹீரோயின் போன்று சிக்கென அழகாக மாறிடுவிங்க

weight-loss
- Advertisement -

பெண்களுக்கு இயல்பாகவே திருமணம் ஆன பின்பும், குழந்தை பெற்ற பின்பும் சிறிதளவு எடை கூட தான் செய்யும். இதனை நாம் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றால் உடல் பருமன் அதிகமாகி விடும். குழந்தை பெற்ற பெண்கள் தங்களை கவனிப்பதற்கென்று தனியாக நேரம் செலவிடுவதென்பது சற்று சிரமமான விஷயம் தான். இதுபோன்ற நேரங்களிலும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரித்து, உடலையும் அழகாக வைத்துக் கொள்ள இந்த சத்து மாவு ஒன்று போதும். இதனை எவ்வாறு வீட்டிலேயே தயார் செய்வது என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

weight

தேவையான பொருட்கள்:
கொள்ளு – 100 கிராம், பார்லி அரிசி – 100 கிராம், சின்ன சோளம் – 100 கிராம், கருப்பு கவுனி அரிசி – 100 கிராம், வரகு அரிசி – 100 கிராம், சாமை அரிசி – 100 கிராம், திணை அரிசி 100 கிராம், கம்பு – 100 கிராம், கேழ்வரகு – 100 கிராம்.

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு, பார்லி அரிசி, சின்ன சோலம், மற்றும் கருப்பு கவுனி அரிசி இவை நான்கையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொண்டு ஒரு சுத்தமான துணி விரித்து அனைத்து பொருட்களையும் நன்றாக பரப்பி விட்டு உலர்த்த வேண்டும்.

navadhaniyam

பிறகு அதே போல் ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி ,கேழ்வரகு மற்றும் கம்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொண்டு நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொண்டு ஒரு துணி விரித்து அனைத்தையும் நன்றாக பரப்பி விட்டு உலர்த்தி எடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் முதலில் கழுவி உலர்த்தி எடுத்த பொருட்களை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டாவதாக கழுவி காய வைத்த பொருட்களை கடாயில் சேர்த்து அதேபோல் வறுத்துக் கொண்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

dry

அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க கூடிய சத்து மாவு தயாராகிவிட்டது.

kanji3

சத்துமாவு கஞ்சி:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீருடன், 2 ஸ்பூன் சத்து மாவு சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு நறுக்கிய கேரட், பீன்ஸ் இவற்றையும் சேர்த்து, பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் கஞ்சி தயாராகிவிடும். இதில் கால் ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ulunthu-kanji7

இந்த சத்து மாவு கஞ்சியை இனிப்பு சுவையிலும் செய்து சாப்பிடலாம். 2 ஸ்பூன் சத்து மாவை தண்ணீரில் கரைத்து கொண்டு, அவை கொதித்ததும் அதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். இந்த சத்து மாவு கஞ்சியை காலை அல்லது மாலை இவற்றில் ஏதேனும் ஒரு வேளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் வெளியேறி உடல் எடை கூடாமல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கலாம்.

- Advertisement -