பலாக்கொட்டை வடை செய்வது எப்படி?

jackfruit seeds vadai
- Advertisement -

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் கிடையாது. அதேபோல் இந்த பலாப்பழமும் பிடிக்காது என்று சொல்பவர்களும் மிக மிக குறைவு. பலாப்பழத்தில் கூட எண்ணற்ற ரெசிபிகள் உண்டு ஆனால் பலாபழத்திலும் சில ரெசிபிகள் உண்டு. இதில் பெரும்பாலும் பலாக் கொட்டை வறுவல் குழம்பு போன்றவற்றை செய்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த பலாக்கொட்டையை வைத்து ஒரு அருமையான வடை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பலாக்கொட்டையில் செய்யப்படும் வடை கறிவடை போலவே அத்தனை சுவையாக இருக்கும். அசைவம் சாப்பிடாத நாட்களிலும், சைவ பிரியர்களுக்கும் ஏற்ற அட்டகாசமான ஒரு ரெசிபி என்றே சொல்லலாம் வாங்க அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பலாக்கொட்டை தோல் உரித்தது -1 கப்,
கடலை மாவு – 1/2 கப்,
சோம்பு -1 டேபிள் ஸ்பூன்,
பூண்டு – பத்து பல்,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 1,
உப்பு -1/4 டீஸ்பூன்,
வடை பொரித்து எடுக்க எண்ணெய்.

செய்முறை விளக்கம்

இந்த வடை செய்வதற்கு முதலில் பலாக்கட்டையின் மேலே உள்ள தோலை எல்லாம் நீக்கி சுத்தம் செய்த பிறகு ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள். இத்துடன் பூண்டு பல் சோம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்தெடுத்த இந்த பலாக்கொட்டையை ஒரு பவுலுக்கு மாற்றி விடுங்கள். அதில் கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்து விடுங்கள். மேலும் இத்துடன் கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லியும் நறுக்கி சேர்த்த பின் உப்பு போட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

முதலில் தண்ணீர் ஊற்றாமல் இதில் உள்ள ஈரப்பதத்தில் மாவை பிரசித்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டும் லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். இதையெல்லாம் சேர்த்த பிசைந்த பிறகு வடை பிடிக்கும் அளவிற்கு மாவு பதம் வரவேண்டும். அதன் பிறகு இந்த மாவை உங்களுக்கு தேவையான அளவில் மசால் வடை தட்டுவது போல தட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தட்டி வைத்த வடைகளை ஒவ்வொன்றாக போட்டு எடுங்கள். இந்த வடை மிதமான தீயில் தான் வேக வேண்டும் ஆகையால் இப்படி வேக வைக்கும் போது தான் வடை நன்றாக வெந்தும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அரிசி உளுந்து சேர்க்காமல் சுவையான பன் தோசை ரெசிபி

ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு அடுத்த பக்கமும் வெந்த பிறகு எண்ணெய்யின் சலசலப்பு அடங்கியதும் வடைகளை எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் அருமையான சுவையில் அட்டகாசமான பலாக்கொட்டை வடை தயார். ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க இனி அடுத்த சீசன் எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருப்பீங்க.

- Advertisement -