உங்கள் வேலையை சுலபமாக்கும் 10 பயனுள்ள வீட்டு குறிப்புகள். இதை எல்லாம் ட்ரை பன்னி பாருங்க, நிச்சயம் உங்களுக்கு புதிதாக இருக்கும்.

veetu velai
- Advertisement -

பெண்கள் என்னதான் வீட்டுக்கு ராணியாக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் அவர்களுக்கும் சவாலாகத்தான் இருக்கும். அவ்வாறு அன்றாட வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சில விஷயங்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனுள்ள மிகவும் எளிமையான குறிப்புகளை பற்றிதான் தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். உங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிரச்சனைகளை உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ள மேலும் தொடருங்கள்.

Velli

குறிப்பு 1:
புதியதாக வாங்கிய வெள்ளி நகைகளை பயன்படுத்தாமல் பீரோவில் வைத்திருந்தால், சில சமயம் அந்த வெள்ளி நகைகள் தானாகவே கருப்பாக மாறிவிடும். இவற்றை தவிர்க்க வெள்ளி ஆபரணங்களுடன் கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கருப்பாக மாறாமல் புதிய போன்று அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதனை சரிசெய்ய நீங்கள் பயன்படுத்திய பழைய டூத்ப்ரஷ்ஷை நெருப்பில் காட்டி, உருகும் திரவத்தை, ஓட்டையின் மீது படிய செய்தால் ஓட்டை அடைந்து விடும்.

bucket

குறிப்பு 3:
வீட்டில் பூஜை செய்வதற்காக பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் குத்து விளக்கு. எந்த ஒரு இறைவழிபாடாக இருந்தாலும் இந்த விளக்குகள் இல்லாமல் பூஜை நடைபெறுவதில்லை. ஆனால் இந்த விளக்குகளுக்கு பூ வைப்பதில் மிகவும் சிரமம் உள்ளது. என்னதான் அழகாக அவற்றின் மேல் நுனியில் பூ வைத்துவிட்டாலும் அவை உடனே விழுந்துவிடும். இவற்றைத் தவிர்க்க விளக்கின் மேல் நுனியில் ஒரு ரப்பர் பேண்டை சுற்றி வைத்து அதனுள் பூவினை சொருகி வைத்தால் நீங்கள் வைக்கும் பூ கீழே விழாமல் அழகாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
புதியதாக வாங்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் நாட்கள் செல்ல செல்ல அதன் பளபளப்பு குறைந்து மங்கத்தொடங்கி விடும். அப்போது வாரத்திற்கு ஒரு முறை விபூதியை வைத்து நன்றாக தேய்த்து விட்டால், வெள்ளி பாத்திரங்கள் போன்று பளபளவென்று மாறிவிடும்.

ever-silver-vessels

குறிப்பு 5:
உடித்துக்கொள்ளும் உடையில் எனண்ணெய் கரை அல்லது க்ரீஸ் கரை படிந்து விட்டால், அவற்றை எவ்வளவு நன்றாக தேய்த்து துவைத்தாலும் எளிதில் நீக்கி விட முடியாது. ஆனால் துணியின் கரை படிந்த இடத்தில் நீலகிரி தைலத்தை சேர்த்து, நன்றாக கசக்கினால் கரை உடனடியாக மறைந்து விடும்.

- Advertisement -

குறிப்பு 6:
உபயோகப்படுத்தும் ஷூக்களில் ரசகற்பூர துண்டுகளை போட்டு வைத்தால் அவற்றினுள் பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.

குறிப்பு 7:
வீட்டில் பிரிட்ஜ் இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வைத்தால், காய்கறிகள் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

vegetable1

குறிப்பு 8:
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மீது வைத்திருந்தால் பத்து நாட்கள் வரை புதியதாகவே இருக்கும்.

குறிப்பு 9:
இந்த காலகட்டத்தில் வீட்டில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எறும்புகள் குளிர்காலத்திற்கு முன்னதாக அவற்றின் உணவுகளை சேகரித்துக்கொள்ள வீட்டில் உள்ள அரிசி, சர்க்கரை, வெல்லம், பருப்பு வகைகள், தின்பண்டங்கள் இவற்றின்மீது படையெடுத்துவந்து கொண்டிருக்கும். இவற்றைத் தவிர்க்க எறும்பு அதிகம் இருக்கும் இடத்தில் சிறிதளவு பெருங்காயத்தூளை தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

ant-erumbu

குறிப்பு 10:
சில வீடுகளில் குழந்தைகள் சுவரின் அங்கங்கு கிறுக்கி வைத்திருப்பார்கள். அதை சரி செய்ய பல் துலக்கும் பேஸ்டை அதன் மீது லேசாக தடவி தேய்த்தால் போதும் அந்த இடம் தூய்மையாகும்.

- Advertisement -