- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபாதாம் கிரீம் மற்றும் பாதாம் ஃபேஸ் மாஸ்க்

பாதாம் கிரீம் மற்றும் பாதாம் ஃபேஸ் மாஸ்க்

- Advertisement -

நம்முடைய முகத்தில் எந்தவித கரும்புள்ளிகளும் இல்லாமல் சுருக்கங்கள் நீங்கி இளமையுடனும், பொலிவுடன் திகழ வேண்டும் என்று பல கிரீம்களையும், ஃபேஸ் மாஸ்க்களையும் நாம் உபயோகப்படுத்துவோம். இவற்றிற்காக பல வகைப்பட்ட பொருட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை. நம் வீட்டில் ஒரே ஒரு பொடி இருந்தால் போதும் இவை அனைத்தும் நமக்கு கிடைத்து விடும். அந்த பொடி என்ன என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நம் முகத்திற்கு தேவையான அனைத்து வித நன்மைகளையும் தரக்கூடிய பொருட்கள் இயற்கையிலேயே கிடைக்கின்றன. அதை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும். அதுவும் பக்க விளைவுகள் ஏதும் இன்றி நம்மால் பெற முடியும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் பொருள்தான் பாதாம்.

- Advertisement -

பாதாமில் பல அறிய சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் நம் முகத்திற்கு தேவையான அனைத்து வித பொலிவையும் தருகிறது. இந்த பாதாமை வைத்து எப்படி நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளையும் சுருக்கங்களையும் நீக்கி பொலிவான முகத்தை பெற முடியும் என்று பார்ப்போம். இதற்கு முதலில் நல்ல தரமான பாதாம் பருப்புகளை வாங்கி வெயிலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பவுடராக கிடைக்கும் பட்சத்தில் அதையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாமே பவுடர் தயார் செய்வதுதான் மிகவும் நன்மையை தரும்.

இப்பொழுது முதலில் ஃபேஸ் க்ரீமை தயார் செய்து கொள்வோம். இரண்டு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு பாதாம் பொடியை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இந்த கிரீமை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். இந்த கிரீம் ஒரு மாதம் வரை கெடாது.

- Advertisement -

இரவு நேரத்தில் படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த கிரீமை முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி மசாஜ் செய்த பிறகு படுத்து உறங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் ஒருவித பிரகாசமும் பொலிவும் ஏற்படும்.

அடுத்ததாக ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்கை செய்வதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை நம்முடைய முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளும் மாசுமருக்களும் நீங்கிவிடும். பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: கலை இழந்த முகத்தை அழகாக மாற்ற ஃபேஸ் பேக்

இந்த ஒரு பொடியை வைத்து நம்முடைய முகத்தை முழு அழகடனும் பொலிவுடன் நம்மால் மாற்ற முடியும்.

சற்று முன்