- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருத்த முகம் சிவக்க ஃபேஸ் க்ரீம்

கருத்த முகம் சிவக்க ஃபேஸ் க்ரீம்

- Advertisement -

அழகாக இருக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் நிறம் அதிகரிக்க வேண்டும். அடுத்ததாக அவர்கள் என்றும் இளமையாக இருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்வதற்கு பல ஃபேஸ் க்ரீம்களும் ஃபேஸ் மாஸ்களும் இருந்தாலும் இவை இரண்டிற்கும் ஒரே ஒரு கிரீம் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று தானே சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த இரண்டையும் ஒருசேர பெற உதவ கூடிய ஒரு ஃபேஸ் க்ரீமை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பலரும் அறிந்த உண்மையே. எந்த அளவிற்கு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் இளமையாக இருப்போம் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அதே போல் முகத்தின் நிறத்தை அதிகரிக்க நாம் பல ஃபேஸ் க்ரீம்களை உபயோகப்படுத்துவோம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் க்ரீம்களில் கெமிக்கல்கள் இருப்பதால் அது நமக்கு ஏதாவது ஒரு வித பக்க விளைவை ஏற்படுத்தும். இவற்றை தவிர்த்து இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் ஃபேஸ் க்ரீம் தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது அந்த ஃபேஸ் க்ரீமின் பயனால் நம்முடைய நிறமும் அதிகரிக்கும். அதே சமயம் நாம் இளமையாகவும் தோற்றமளிப்போம்.

இந்த ஃபேஸ் க்ரீமை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது மைசூர் பருப்பு. மைசூர் பருப்பில் விட்டமின் சி மற்றும் பி6 இருப்பதால் இது முகத்தின் நிறத்தை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. அதோடு முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களையும் நீக்குவதற்கு இது உதவி புரிகிறது. இரண்டு ஸ்பூன் அளவிற்கு மைசூர் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். வறண்ட சருமம் இருப்பவர்கள் தண்ணீருக்கு பதிலாக காய்ச்சாத பசும்பாலை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் கழித்து இந்த பருப்பை மிக்ஸி ஜாரில் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த மைசூர் பருப்பை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நைசாக அரைப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றாமல் அதற்கு பதிலாக பன்னீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைத்த பருப்பை ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி வடிகட்டி அதன் சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த சாரை அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். அந்த சாறில் இருந்த தண்ணீர் மட்டும் மேலே தனியாக தெரியும் அந்த தண்ணீரை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடியில் இருக்கும் மாவு போன்ற பதத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து ஒன்றோடு ஒன்று கலந்து பேஸ்ட் பதத்திற்கு உருவாகும்.

- Advertisement -

பிறகு இதில் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும். இப்பொழுது கிரீன் தயாராகிவிட்டது. இந்த கிரீமை இரவு நாம் படுக்க செல்வதற்கு முன்பு முகத்திலும் கழுத்திலும் கைகளிலும் எந்த இடத்தில் கருமை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு படுத்து உறங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளரச் செய்யும் ஹேர் மாஸ்க்

இதை நாம் தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நம்முடைய உடல் நிறம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இளமையான தோற்றத்தையும் நம்மால் பெற முடியும்.

சற்று முன்