எலுமிச்சை பழத்தை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! இனி நிறைய காசு மிச்சப்படுத்தலாம்.

elumichai

எலுமிச்சை பழத்தை வைத்து நம்ம வீட்டு சமையல் அறையில், என்னவெல்லாம் செய்ய முடியும்? என்கிற நிறைய விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்! நேரடியா பதிவுக்கு போய் விடலாமா? முதலில் எலுமிச்சை பழத்தை, பிரிட்ஜில் கெடாமல் எப்படி வைப்பது என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம். உங்களுடைய வீட்டில் 10 எலுமிச்சை பழத்தை மொத்தமாக வாங்கி வந்தாலும், அதை தண்ணீரில் போட்டு, நன்றாக கழுவி, ஒரு துணி போட்டு துடைத்தோ, அல்லது ஃபேன் காற்றில் உலர வைத்தோ எடுத்து கொள்ள வேண்டும்.

lemon-peal

எலுமிச்சை பழத்தில் கொஞ்சம்கூட தண்ணீர்ப் பதம் இருக்கக்கூடாது. அவ்வளவு தான். இப்போது அந்த எலுமிச்சை பழத்தை தனித்தனியாக நியூஸ் பேப்பரில் நன்றாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக காற்றுப் புகாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனித்தனியாக பேப்பரில், மடித்து வைத்திருக்கும் எலுமிச்சை பழங்களை, போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால், 6 மாதத்திற்கு கூட எழுமிச்சைபழம் கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் கொஞ்சமாக பழுதான எலுமிச்சை பழத்தை, புதியதாக இருக்கும் நல்ல எலுமிச்சம்பழத்தோடு வைத்தீர்கள். ஏன் என்றால், நன்றாக இருக்கக்கூடிய எலுமிச்சை பழமும் சீக்கிரமாகவே கெட்டுப் போகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

lemon

அப்படி உங்கள் வீட்டில் கொஞ்சம் பழுதான எலுமிச்சைபழம் இருந்தாலும், பரவாயில்லை. அதை வீணாக்காதீர்கள். அதிலிருந்து ஜூஸை மட்டும் தனியாக பிழிந்து வடிகட்டி, எடுத்துக்கொள்ளுங்கள். ஃப்ரீஸரில் ஐஸ் வைக்கும் ட்ரேவில், அந்த லெமன் ஜூஸை, ஊற்றி பிரீஸ் பண்ணிட்டீங்கனா,  லெமன் ஜூஸ் ஐஸ் கட்டியை வைத்து, ஜூஸ் போட்டா சூப்பரா இருக்கும். அல்லது அந்த ஜூசை ஒரு பிளாஸ்டிக், காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு மாதத்திற்கு கூட கெட்டுப்போகாமல் இருக்கும். லெமன் சாதம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி ஜூஸ் எடுத்த எலுமிச்சைப் பழ தோலை கூட தூக்கி குப்பையில் போட வேண்டாம். சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு நன்றாக 10 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். அதன் பின்பு அந்த எலுமிச்சை பழ தோல் திப்பிகளை எல்லாம் வடிகட்டி விட்டு, கொதிக்க வைத்த தண்ணீரை மட்டும் காலி பாட்டிலில் ஊற்றி, வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ப்ரில் லிக்விட் ஐயும், சேர்த்து நன்றாகக் குலுக்கி கொள்ளுங்கள்.

Inji and lemon juice

இப்போது இயற்கையான முறையில் கிளீனிங் வாட்டர் தயார். உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்தம் செய்ய, காசு கொடுத்து எந்த லீக்விடும் வாங்க வேண்டாம். இதை வைத்து சமையலறை மேடை, டைல்ஸ், ஸ்டவ், சிங்க் எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம். சமையலறை நன்றாக வாசமாகவும் இருக்கும். பூச்சிகள் தொல்லையும் இருக்காது.

இந்த எலுமிச்சம் பழத்தோலை வச்சு ஒரு சூப்பர் ஹேண்ட் வாஷ் கூட வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதையும் தெரிஞ்சுக்கலாமா? 2 எலுமிச்சம் பழத்தோலை கத்திரிக்கோலால் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் பொடியாகத் துருவி கூட கொள்ளலாம். 1/2 லிட்டர் அளவு தண்ணீரில் வெட்டிய எலுமிச்சை பழ தோலைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

lemon-hand-wash

உங்கள் வீட்டில் குளிப்பதற்கு பயன்படுத்தும் ஏதாவது ஒரு சோப்பு கட்டாயம் இருக்கும். அந்த சோப்பில் சிறிய துண்டு அளவு எடுத்து, பொடி பொடியாக வெட்டி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழத்தோல் தண்ணீர் 10 நிமிடங்கள் கொதித்த பின்பு, அடுப்பை அணைத்து விட்டு, பொடியாக வெட்டிய சோப்பை, அந்த தண்ணீரில் போட்டு கரையும் வரை லேசாக கலக்கி விடுங்கள். சீக்கிரம் கரைந்துவிடும்.

அதன் பின்பு, இந்த கலவை நன்றாக ஆரட்டும். ஆறிய பின்பு, உங்களுக்கு ஜெல் பதத்தில் லிக்விட் வாஷ் கிடைத்திருக்கும். அந்த ஜெல் பதத்தில் இருக்கும் ஹேண்ட் வாஷோடு, ஒரு ஸ்பூன் அளவு கிளிசரின் சேர்த்து, 1/2 கப் அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்றாக ஒரு கரண்டியை விட்டு, அடித்து கலந்தீர்கள் என்றால், சூப்பரான வாசமான இயற்கையான ஹேண்ட் வாஷ் தயார். (கிளிசரின் மெடிகல் ஷாப், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். 10 லிருந்து 15 ரூபாய் குல் தான் இருக்கும். அதை மொத்தமாக கூட பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஸ்பூன் அளவு தான், ஒரு முறைக்கு பயன்படுத்த போகின்றோம்.)

lemon1

இதை ஒரு பழைய வாட்டர் கேனில் ஊற்றி, அந்த வாட்டர் கேன், மேல் முடியில், ஒரு ஓட்டை போட்டு வைத்துக் கொண்டீர்கள் என்றால், சுலபமாக கைகழுவ பயன்படுத்திக் கொள்ளலாம். இனி அதிகமாக செலவு செய்யாதீர்கள். விலை குறைவாக கிடைக்கும் எலுமிச்சை பழத்தை வாங்கி, பலவகையான பயன்பாட்டை, நம் வீட்டிலேயே செய்துகொள்ள இப்போது உங்களுக்கு நிறைய தெரிந்துவிட்டது அல்லவா? இனி எதுக்கு அதிகமா காசு கொடுத்து கடையில லிக்விட் வாங்க போறீங்க?

இதையும் படிக்கலாமே
இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் இருக்க இப்படித் தான் மாவு அரைக்க வேண்டும்! தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.