இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் இருக்க இப்படித் தான் மாவு அரைக்க வேண்டும்! தெரிந்து கொள்ளுங்கள்.

idly-maavu
- Advertisement -

இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கும். என்ன தான் முயற்சி செய்து மெனக்கெட்டால் கூட ஓரிரு நாட்கள் தான் புளிக்காமல் இருக்கும். பிறகு மூன்றாவது நாளே அதிகம் புளித்துப் போய் தோசை தான் சுட வேண்டி இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

grinder

இட்லி தோசை மாவு புளிக்காமல் வைத்திருப்பதற்கு முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைப்பவர்கள் கழுவுவது இல்லை. நாம் என்ன தான் போன முறை கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். குறைந்தது அரிசி மற்றும் உளுந்து 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதன் பிறகு உளுந்தை போட்டு நீங்கள் அரைக்கும் பொழுது கைபடாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி தள்ளி விட்டு அரைக்கலாம். கையை மட்டும் உபயோகப்படுத்த வேண்டாம்.
உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் மட்டும் தான் நாம் கையால் மாவை எடுப்போம். மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் உபயோகிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். எவர்சில்வரை விட பிளாஸ்டிக்கில் மாவை எடுத்தால் விரைவில் புளிப்பது இல்லை.

idly-maavu

அதன் பின் அரிசியை போட்டு நீங்கள் வழக்கம் போல் எப்படி தண்ணீர் ஊற்றி அரைப்பீர்களோ அதே போல் ஊற்றி அரைக்க வேண்டும். உளுந்தை விட அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை. கிரைண்டரிலேயே நன்கு கலந்து சூப்பராக வந்து விடும்.

- Advertisement -

இப்போது ஐந்து நிமிடம் ஆன பிறகு கிரைண்டரை தனியே எடுத்து மாவு ஸ்டோர் செய்யும் பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். முழுவதுமாக நம்மால் கைகள் படாமல் எடுக்க முடியாது. அதனால் கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள். பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.

dosai-maavu

மீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் நான்கு சுத்தமாக எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரமாவது ஆகும். இந்த மாவை மறுநாள் காலையில் இட்லி சுட்டால் சூப்பராக மெத்தன பஞ்சுபோல் இட்லி வரும்.

- Advertisement -

idli-mavu

ஃப்ரிட்ஜில் இருக்கும் ஸ்டோர் செய்து வைத்த மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து வைத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும். நாம் சுத்தமான முறையில் கை படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால் மாவு அவ்வளவு சீக்கிரமாக புளிக்காது. ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் ஒருமுறை மாவு அரைத்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Idli

சரி இப்போது மாவு புளித்து ஆகிவிட்டது, அதை சரி செய்ய என்ன செய்வது? புளித்த மாவில் சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் அந்த அளவிற்கு புளிப்பு உங்களுக்கு தெரியாது. சாப்பிட நன்றாக இருக்கும். அதிகம் புளித்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிதளவு வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை போட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் புளிக்காத அருமையான தோசை நமக்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே
உடலுக்கு ஆரோக்கியம் தரும் ‘ப்ரோக்கோலி கேரட் புலாவ்’ 15 நிமிடத்தில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -