செலவே செய்யாமல், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்தப் பொருட்களை வைத்தே நீங்கள் அழகு தேவதையாக மாறலாமே! அந்த ரகசிய பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

face3
- Advertisement -

நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்ள சமையலறையில் பலவகையான பொருட்கள் உள்ளது. அதில் குறிப்பிட்ட சில பொருட்களைப் பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது எந்தெந்த பொருட்கள், அந்த பொருட்களோடு எந்த பொருட்களை சேர்த்து நம்முடைய முகத்தில் போட்டால், பொலிவான, அழகான, திட்டுக்கள் இல்லாத, சுருக்கமில்லாத சருமத்தை சுலபமான முறையில் பெற முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சும்மா ஒன்னும் இல்லைங்க! இதை முகத்தில் போட்டால், வெகு சில நாட்களிலேயே நீங்க தேவதை போல காட்சி அளிப்பீர்கள்.

honey 2

நம்முடைய முகப்பொலிவிற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருளில் முதன்மையான பொருள் தேன். தேனுடன் எந்தெந்த பொருட்களை கலக்கப் போகின்றோம். மஞ்சள், தயிர், ஜோஜோபா எண்ணெய் இந்த 3 பொருட்களை கலந்து முக அழகிற்கு ஒரு ஜெல்லை தயார் செய்யப் போகின்றோம். அது எப்படி என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

முதல் குறிப்பு:
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவு தேன் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூளை போட்டு, நன்றாக கலக்கவேண்டும். இது நமக்கு ஒரு ஜெல் போல கிடைக்கும். இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ லேசாக இதைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக தடவி, 15 நிமிடங்கள் வரை காய விட்டு அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

manjal

இரண்டாவது குறிப்பு:
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவு தேன், 1 ஸ்பூன் அளவு புளிக்காத கெட்டி தயிர் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து, நன்றாகக் கலந்து இதை உங்களுடைய முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்றாக உலர விட்டு, அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். இதை கொஞ்சம் திக்கான பேஸ்டாக முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இந்த கலவையை தினம்தோறும் ஃபிரஷாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

மூன்றாவது குறிப்பு:
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஜோஜோபா எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த எண்ணெய்யை ஒரு விரல்களால் தொட்டு, சொட்டுச் சொட்டாக முகத்தில் ஆங்காங்கே வைத்து, கண்ணுக்கு தெரியாமல் தடவி விட்டு விட வேண்டும். இது இரவு முழுவதும் உங்கள் முகத்தில் அப்படியே இருக்கலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவி விடலாம்.

curd

வட அமெரிக்காவில் பாலைவன பகுதியில் ஜோஜோபா தாவரத்தில் இருந்து விளையக்கூடிய கொட்டையில் இருந்து எடுக்கப்படுவது தான் ஜோஜோபா எண்ணெய். இது சருமத்திற்கு மிகவும் நன்மையை கொடுக்கக்கூடியது. முகத்தில் இருக்கும் முகப்பரு, தழும்பு மறைய, கருந்திட்டுக்கள் மறைய, சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெற இந்த ஜோஜோபா ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தி வரலாம். ஜோஜோபா எனண்ணெயும் தேனும், சேர்ந்த கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

jojobo-oil

இந்த ஜோஜோபா ஆயிலை உங்களுடைய சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. முகத்தைத் தவிர வேறு ஏதாவது ஒரு இடத்தில் தடவி பார்த்து உங்களுக்கு ஏதேனும் சரும அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுடைய அழகு மேலும் மேலும் அதிகரிக்க இந்த குறிப்பு உங்களுக்கு உபயோகமானதாக அமையும்.

- Advertisement -